காயங்களுடன் ஆண் சடலம் போலீசார் தீவிர விசாரணை

Added : நவ 09, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர், சோளிபாளையத்தில் காட்டுப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது குறித்து மக்கள் போலீசா ருக்கு தகவல் அளித்தனர்.இதனால், 15 வேலம்பாளையம் போலீசார் பார்வையிட்டனர். அதில், அடையாளம் தெரியாத அளவுக்கு முகப்பகுதி அழுகிய நிலையில், 45 வயது மதிக்க ஆணின் சடலம் இருந்தது. உடலில், எட்டு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட அடையாளம் இருந்தது.'டிசர்ட்' மற்றும் காவி

திருப்பூர்: திருப்பூர், சோளிபாளையத்தில் காட்டுப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது குறித்து மக்கள் போலீசா ருக்கு தகவல் அளித்தனர்.இதனால், 15 வேலம்பாளையம் போலீசார் பார்வையிட்டனர்.
அதில், அடையாளம் தெரியாத அளவுக்கு முகப்பகுதி அழுகிய நிலையில், 45 வயது மதிக்க ஆணின் சடலம் இருந்தது. உடலில், எட்டு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட அடையாளம் இருந்தது.'டிசர்ட்' மற்றும் காவி கலர் வேட்டி அணிந்திருந்தார். சடலம் அருகே, 300 ரூபாய், பீடி கட்டு ஆகியவை இருந்தது.கொலை செய்யப்பட்ட நபர் யார், எந்த ஊர், அவரது பெயர் உள்ளிட்ட விபரங்கள் எதுவும் தெரியவில்லை. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை செய்யப்பட்டு, ஐந்து நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்று, அதன் காரணமாக, உடல் அழுகியது. வேறு எங்காவது கொலை செய்து, சடலத்தை இங்கு வந்து போட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X