செய்தி செய்தி

தமிழ்நாடு

தரிசு நிலம் வளம் பெற திட்டம் பல்லடத்தில், 5 கிராமம் தேர்வு

Added : நவ 09, 2021
Share
Advertisement
பல்லடம்: தொழில் வளர்ச்சி, ரியல் எஸ்டேட் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பாசன நிலங்களின் பரப்பளவு குறைந்து வருகிறது. இதனால், விவசாய தொழில் நிறைந்த கிராமங்களும் நகரமயமாகி வருகின்றன. இதற்கிடையே, தரிசு நிலங்களை வளமாக்கும் திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறிப்பிட்ட சில கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசு

பல்லடம்: தொழில் வளர்ச்சி, ரியல் எஸ்டேட் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பாசன நிலங்களின் பரப்பளவு குறைந்து வருகிறது. இதனால், விவசாய தொழில் நிறைந்த கிராமங்களும் நகரமயமாகி வருகின்றன.
இதற்கிடையே, தரிசு நிலங்களை வளமாக்கும் திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறிப்பிட்ட சில கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசு திட்டங்கள் அனைத்தும் அக்கிராமங்களுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.பல்லடம் வேளாண் துறை உதவி இயக்குனர் பாமாமணி கூறியதாவது:உணவு உற்பத்தியை பெருக்கும் நோக்கில், தரிசு நிலங்களை மேம்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு அரசு சார்ந்த திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு, கிராமங்கள் வளமாக்கப்படும். பல்லடம் வட்டாரத்தில், பருவாய், பணிக்கம்பட்டி, செம்மிபாளையம், கணபதிபாளையம், மற்றும் கே.கிருஷ்ணாபுரம் ஆகிய ஐந்து ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வேளாண் துறை, தோட்டக்கலை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடை பராமரிப்பு உட்பட, 13 அரசு துறையின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X