பொது செய்தி

தமிழ்நாடு

கிருமிநாசினி கையிருப்பில் இருக்க வேண்டும்! மாவட்ட கண்காணிப்பு அலுவலர் 'அட்வைஸ்'

Added : நவ 09, 2021
Share
Advertisement
திருப்பூர்: ''பருவமழையின் போது, நோய்கள் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கிருமி நாசினிகளை போதியளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும்,'' என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் அறிவுறுத்தினார்.வடகிழக்கு பருவமழை தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வினீத் முன்னிலை



திருப்பூர்: ''பருவமழையின் போது, நோய்கள் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கிருமி நாசினிகளை போதியளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும்,'' என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் அறிவுறுத்தினார்.வடகிழக்கு பருவமழை தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் பேசியதாவது:பேரிடர் காலத்தில் மக்களின் பங்கேற்பும் அவசியம் என்பதால், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களை இணைத்து மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளை செய்வதுக்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம்.பருவமழையின் போது, அனைத்து நீர்வழிப்பாதைகள், கால்வாய்கள் உள்ளிட்டவைகளில் உள்ள முட்புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றி துார்வார வேண்டும். கீழே விழும் மரக்கிளைகள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்த தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.உயிர்காக்கும் மருந்துகளை தயார் நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். மழை காலங்களில் நீர் தேங்கி அதன் மூலம் நோய்கள் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிகளை போதியளவில் கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார், எஸ்.பி., செஷாங் சாய், டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி உட்பட துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X