கோவில் உண்டியல் திறப்பு ரூ.15.51 லட்சம் காணிக்கை

Added : நவ 09, 2021
Advertisement
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில்களில், நேற்று உண்டியல் திறந்து, பக்தர்கள் அளித்த காணிக்கை எண்ணப்பட்டன.கரூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் சூரியநாராயணன், செயல் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டன. மகாவிஷ்ணு சேவா சங்கத்தை சேர்ந்த, 26 பேர், எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீ விஸ்வேஸ்வர

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில்களில், நேற்று உண்டியல் திறந்து, பக்தர்கள் அளித்த காணிக்கை எண்ணப்பட்டன.கரூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் சூரியநாராயணன், செயல் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டன.
மகாவிஷ்ணு சேவா சங்கத்தை சேர்ந்த, 26 பேர், எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலின், ஐந்து உண்டியல்களில், 7 லட்சத்து, 85 ஆயிரத்து, 602 ரூபாய், 45 கிராம் தங்கம், 35 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்தன.ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில் உள்ள, மூன்று உண்டியல்களில், 7 லட்சத்து, 65 ஆயிரத்து, 436 ரூபாய், 125 கிராம் தங்கம், 25 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்ததாக செயல் அலுவலர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X