அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு கூடுதல் நிதி: பிரதமருக்கு பன்னீர் கடிதம்

Added : நவ 09, 2021
Share
Advertisement
சென்னை:'மழை நிவாரணம், மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு, தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கும்படி, மத்திய நிதி அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.கடிதம் வருமாறு:சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், கன மழையால் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரிடர்

சென்னை:'மழை நிவாரணம், மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு, தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கும்படி, மத்திய நிதி அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதம் வருமாறு:சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், கன மழையால் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழலை அறிந்திருப்பீர்கள். தெருக்களில் 3 அடி உயரத்திற்கு நீர் தேங்கி நிற்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து, நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், மேலும் ஐந்து நாட்களுக்கு கன மழை இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்திற்கு தேவையான உதவிகளை, மத்திய அரசு செய்யும் என தெரிவித்ததற்கு, தமிழக மக்கள் சார்பில் நன்றி.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிக்கு கூடுதல் நிதி தேவை.எனவே நிவாரணம், மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு, தமிழகத்திற்கு தேவையான நிதியை விடுவிக்கும்படி, மத்திய நிதி அமைச்சகத்துக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X