பொது செய்தி

தமிழ்நாடு

பல்லவன், வைகை ரயில்கள் வழக்கம் போல இயங்கும்!

Added : நவ 09, 2021
Share
Advertisement
சென்னை:பல்லவன், வைகை ரயில்கள் இன்று வழக்கம் போல இயக்கப்படுகின்றன.ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் பல்லவன் ரயில், இன்று செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை ரயில், எழும்பூர் - செங்கல்பட்டு இடையே இன்று ரத்து செய்யப்பட்டு, செங்கல்பட்டில் இருந்து

சென்னை:பல்லவன், வைகை ரயில்கள் இன்று வழக்கம் போல இயக்கப்படுகின்றன.

ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் பல்லவன் ரயில், இன்று செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை ரயில், எழும்பூர் - செங்கல்பட்டு இடையே இன்று ரத்து செய்யப்பட்டு, செங்கல்பட்டில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்திருந்தது.

ரயில் பாதை பராமரிப்பு பணி முன்கூட்டியே முடிந்ததால், இந்த ரயில்கள் இன்று பாதியில் ரத்து செய்யப்படவில்லை. பல்லவன் ரயில் காரைக்குடியில் இருந்து எழும்பூர் வரை இயக்கப் படும். வைகை எக்ஸ்பிரஸ் இன்று வழக்கம் போல, எழும்பூரில் இருந்து புறப்படும்.

புதுச்சேரியில் இருந்து புதுடில்லிக்கு இன்று இயக்கப்படும் சிறப்பு ரயில், பாதை மாற்றி விழுப்புரம், காட்பாடி, அரக்கோணம், கொருக்குப்பேட்டை வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, இந்த ரயில் புதுச்சேரியில் இருந்து இன்று வழக்கமான பாதையில், சென்னை எழும்பூர் வழியாக புதுடில்லிக்கு இயக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X