செய்தி செய்தி

தமிழ்நாடு

மக்கள் சபையில் மலையாக குவியும் மனுக்கள்!

Added : நவ 09, 2021
Share
Advertisement
கோவை: மக்கள் சபை கூட்டங்களில் மலையாக குவியும் மனுக்கள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்களாக மாறி கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில், கோவை தி.மு.க.,வினர் உள்ளனர்.கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்கள் சபை என்ற பெயரில், மனு வாங்கி வருகிறார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் மாநகராட்சி, பேரூராட்சி,

கோவை: மக்கள் சபை கூட்டங்களில் மலையாக குவியும் மனுக்கள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்களாக மாறி கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில், கோவை தி.மு.க.,வினர் உள்ளனர்.கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்கள் சபை என்ற பெயரில், மனு வாங்கி வருகிறார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் மனு வாங்குவது, கோரிக்கையை நிறைவேற்றுவது, அதன் மூலம் ஓட்டுக்களை அறுவடை செய்யலாம் என்பது அவரது திட்டம்.இதன்படி, முதல் வாரத்தில் நடந்த மக்கள் சபை கூட்டங்களில், 15 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட மக்கள் சபை கூட்டங்களில் மட்டும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.அனைத்து இடங்களிலும் மக்கள் சபை முடியும்போது, மொத்த மனுக்களின் எண்ணிக்கை, சில லட்சங்களை தாண்டி விடும் என்கின்றனர் அதிகாரிகள்.இப்படி மலையாக குவியும் மனுக்களுக்கு தீர்வு கண்டாலே, நகர்ப்புற உள்ளாட்சிகளை வெற்றி கொண்டு விடலாம் என்ற நம்பிக்கை, தி.மு.க., நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.'தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், கோவையில் மட்டும் மக்கள் சபை கூட்டம் நடத்தி மனு வாங்குவது, நிச்சயம் பொதுமக்கள் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்தும்; அதன் மூலம் தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்' என்று கட்சியினர் கூறுகின்றனர்.இதனால் உள்ளாட்சி வார்டுகளில் ஆளும் கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட, சீட் கேட்போர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அலுவலர்கள் குமுறல்!கோவையில் மக்கள் சபை கூட்டங்கள் அரசு விடுமுறை நாட்களில் நடத்தப்படுகின்றன. அமைச்சர் நடத்தும் கூட்டம் என்பதால் அனைத்து அரசுத்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். உயர் அதிகாரிகள் பங்கேற்பதால், அவர்கள் கீழ் பணியாற்றும் இதர அலுவலர்களும் கட்டாயமாக வர வேண்டியுள்ளது. இந்த நடைமுறையால், விடுமுறை நாளில் குடும்பத்துடன் ஓய்வில் இருக்க விரும்பும் அரசு அலுவலர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X