செய்தி செய்தி

தமிழ்நாடு

கோவையில் காய்கறி விலை உயர்வு: தொடர்மழை எதிரொலி

Added : நவ 10, 2021
Share
Advertisement
கோவை: தொடர் மழை காரணமாக, கோவையில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கோவை மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து சில நாட்களுக்கு வரத்து குறைவாகவே இருக்கும்.இந்தாண்டு மழையும் நன்றாக பெய்து வருவதால், தேவைக்கு ஏற்ற வரத்து இல்லை. இதனால், தீபாவளிக்கு முன் இருந்ததைவிட, காய்கறி

கோவை:
தொடர் மழை காரணமாக, கோவையில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கோவை மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து சில நாட்களுக்கு வரத்து குறைவாகவே இருக்கும்.இந்தாண்டு மழையும் நன்றாக பெய்து வருவதால், தேவைக்கு ஏற்ற வரத்து இல்லை. இதனால், தீபாவளிக்கு முன் இருந்ததைவிட, காய்கறி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.தீபாவளிக்கு முன், 30 ரூபாய்க்கு விற்ற தக்காளியின் விலை தற்போது, 60 ரூபாய்க்கு மேல் விற்கிறது.
பெரிய வெங்காயத்தின் விலை, 30 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் அனைத்து காய்கறி விலையும் உயர்ந்துள்ளது.கோவை டி.கே. மார்க்கெட்டில் காய்கறி நிலவரம் (கிலோ ஒன்றுக்கு):சின்ன வெங்காயம், 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம், 40க்கும், பச்சை மிளகாய், 60க்கும், உருளைக்கிழங்கு, 50க்கும், கேரட் 80க்கும், பீன்ஸ், 90க்கும், முட்டைக்கோஸ் 40க்கும், கத்தரி, வெண்டை, அவரைக்காய், 60க்கும், காலிபிளவர், 70 ரூபாய்க்கும் விற்பனையானது.வியாபாரிகள் கூறுகையில், 'மழையால் காய்கறி வரத்து குறைந்துள்ளது. தீபாவளிக்கு முன் விற்ற விலையைவிட, 20 சதவீதம் உயர்ந்துள்ளது. மழை தொடர்ந்தால் காய்கறி விலை, இன்னும் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X