பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு சிகிச்சைக்கு 3 லட்சம் மாத்திரை கையிருப்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு பயன்படுத்தப்படும், ஓசல்டாமிவிர் மாத்திரைகள், 3 லட்சம் கையிருப்பில் உள்ளன,'' என்று, தமிழக மருத்துவ பணிகள் கழக மேலாண் இயக்குனர் தீபக் ஜேக்கப் கூறினார்.இந்தாண்டில் இதுவரை, 3,800க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி, 30க்கும் மேற்பட்டோர் டெங்கு அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை:''தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு பயன்படுத்தப்படும், ஓசல்டாமிவிர் மாத்திரைகள், 3 லட்சம் கையிருப்பில் உள்ளன,'' என்று, தமிழக மருத்துவ பணிகள் கழக மேலாண் இயக்குனர் தீபக் ஜேக்கப் கூறினார்.

இந்தாண்டில் இதுவரை, 3,800க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி, 30க்கும் மேற்பட்டோர் டெங்கு அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.இந்நிலையில், மருத்துவ பணிகள் கழக மேலாண் இயக்குனர் தீபக் ஜேக்கப் கூறியதாவது: தமிழகத்தில், பருவகால நோய்களுக்கு தேவையான மருந்துகளும், மருத்துவ பொருட்களும் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஆகஸ்டில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களுக்கும், மழைக்கால காய்ச்சலுக்கும் சிகிச்சை அளிக்க தேவையான மாத்திரைகள் வாங்கப்பட்டன.டெங்குவுக்கு வழங்கப்படும், 'ஓசல்டாமிவிர்' மாத்திரைகள் 3 லட்சம்; காய்ச்சலுக்கு வழங்கப்படும் பாரா சிட்டமால் மாத்திரைகள் 9 கோடி உள்ளன.

இவை தவிர, தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான் இருமலுக்கான, 'டிபிடி' மாத்திரைகள், மூன்று மாதங்களுக்கு தேவையான அளவு உள்ளன. கடந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு, 1.75 லட்சம் ஓசல்டாமிவிர் மாத்திரைகள் தேவைப்பட்டன. தற்போது கூடுதலான எண்ணிக்கையில் மாத்திரைகள் உள்ளன. அதேபோல, நீரில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கான குளோரின் மருந்தும் போதிய அளவில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


மத்திய குழு ஆய்வு



டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவினர், நேற்று முன்தினம் அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து பேசினர். அதன்பின்,ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்ததுடன், அங்கு சிகிச்சை பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X