சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தளவானுார் தடுப்பணை மீண்டும் உடைந்து சேதம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த தளவானுார் தென்பெண்ணையாற்றில் உள்ள தடுப்பணை, மீண்டும் உடைந்து சேதமானது.விழுப்புரம் மாவட்டம், தளவானுார் மற்றும் கடலுார் மாவட்டம், எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 2019ல் அ.தி.மு.க., ஆட்சியில் 25.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது.இப்பணியை நாமக்கல் 'பி.எஸ்.டி., கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' நிறுவனம் எடுத்து செய்தது.
 தளவானுார் தடுப்பணை மீண்டும் உடைந்து சேதம்

விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த தளவானுார் தென்பெண்ணையாற்றில் உள்ள தடுப்பணை, மீண்டும் உடைந்து சேதமானது.

விழுப்புரம் மாவட்டம், தளவானுார் மற்றும் கடலுார் மாவட்டம், எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 2019ல் அ.தி.மு.க., ஆட்சியில் 25.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது.இப்பணியை நாமக்கல் 'பி.எஸ்.டி., கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' நிறுவனம் எடுத்து செய்தது. 2020 ஏப்ரல் மாதம் பணி முடிந்து, டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது.

இந்த தடுப்பணை, 376.60 மீட்டர் நீளம், வெள்ள தடுப்புக் கரை 800 மீட்டர் நீளத்திலும் கட்டப் பட்டது.இருபுறமும் உள்ள இரண்டு மாவட்டங்களுக்கும் தண்ணீர் திறக்கும் வகையில், தலா மூன்று 'ஷட்டர்'கள் அமைக்கப்பட்டன. 67 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்க முடியும்.

இதில், கடலுார் மாவட்ட பகுதியான எனதிரிமங்கலம் ஆற்றின் கரையோரம் இணைப்புச் சுவர் பகுதியில், கடந்த ஜனவரி 22ல் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியது. இதனால், ஒரு ஷட்டர் உடைந்தது; உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர்.இதையடுத்து, பாதுகாப்பு கருதி விழுப்புரம் மாவட்டம், தளவானுார் பகுதியில் மண் சுவரால் கரை எழுப்பி, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.

தற்போது, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையில் இருந்து, சில தினங்களுக்கு முன் திறக்கப்பட்ட 1,500 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று அதிகாலை 1:45 மணிக்கு, தளவானுார் பகுதியில் உள்ள மண் தடுப்புச் சுவர், ஆற்று நீரில் கரைந்து அடித்துச் சென்றது. இதனால், அணையின் முதல் ஷட்டர் உள்ள பகுதி முற்றிலுமாக சாய்ந்து சேதமடைந்து, தண்ணீர் முழுதும் கடலுார் கடலை நோக்கிச் சென்றது.

தகவல் அறிந்த அமைச்சர் பொன்முடி, கலெக்டர் மோகன் ஆகியோர் நேற்று காலை 7:00 மணிக்கு தடுப்பணையை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.அமைச்சர் பொன்முடி கூறுகையில், ''தடுப்பணையின் இருபுறங்களையும் முழுதுமாக சீரமைக்கும் பணிகள், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் நடைபெறும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X