சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகனை கல்லுாரியில் சேர்க்க வந்த தந்தை பலி

Added : நவ 10, 2021
Share
Advertisement
கோவை: கோவையில், மகனை இன்ஜினியரிங் கல்லுாரியில் சேர்ப்பதற்காக வந்த விவசாயி, சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லுாரை சேர்ந்தவர் கதிரவன்,52.விவசாயி. இவரது மகன் தமிழ் அன்பன்,19. இவருக்கு கோவை காளப்பட்டி அருகே உள்ள தனியார் இன்ஜி.,கல்லுாரியில் சேர்ந்து படிக்க சீட் கிடைத்தது.மகனை கல்லுாரியில் விடுவதற்காக,

கோவை: கோவையில், மகனை இன்ஜினியரிங் கல்லுாரியில் சேர்ப்பதற்காக வந்த விவசாயி, சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லுாரை சேர்ந்தவர் கதிரவன்,52.விவசாயி. இவரது மகன் தமிழ் அன்பன்,19. இவருக்கு கோவை காளப்பட்டி அருகே உள்ள தனியார் இன்ஜி.,கல்லுாரியில் சேர்ந்து படிக்க சீட் கிடைத்தது.மகனை கல்லுாரியில் விடுவதற்காக, நேற்றுமுன்தினம் கோவை வந்தார். தொடர்ந்து, மகனை விடுதியில் விட்டு விட்டு கல்லுாரி வளாகத்தில் பெற்றோர் அமர்ந்திருந்த அறைக்கு சென்றார்.அப்போது, திடீரென மார்பை பிடித்தபடி சுருண்டு விழுந்துள்ளார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X