மழை பாதிப்பு இருப்பின் லீவு விடலாம்: தலைமையாசிரியர்களுக்கு அதிகாரம்| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

மழை பாதிப்பு இருப்பின் 'லீவு' விடலாம்: தலைமையாசிரியர்களுக்கு அதிகாரம்

Added : நவ 10, 2021
Share
கோவை: மழை வெள்ளத்தால் மாணவர்கள் படிக்க முடியாத சூழல் ஏற்படும் பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவித்து கொள்ள, தலைமையாசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து பள்ளிகளும் இயங்குவதால், பழுதடைந்த



கோவை: மழை வெள்ளத்தால் மாணவர்கள் படிக்க முடியாத சூழல் ஏற்படும் பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவித்து கொள்ள, தலைமையாசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து பள்ளிகளும் இயங்குவதால், பழுதடைந்த கட்டடங்கள் அருகே, மாணவர்கள் செல்லாமல் இருக்க அறிவுறுத்த வேண்டும். பழுதடைந்த மின்சார ஒயர்கள், சுவிட்ச்கள் இருந்தால் அப்புறப்படுத்துதல், நீர் நிலைகள் அருகே மாணவர்கள் செல்லாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வளாகத்திற்குள் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்துதல், வளாகத்தை சுத்தமாக பராமரித்தல் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.மழை காரணமாக, சில பள்ளிகளில், வளாகம் முழுக்க, நீர் நிரம்பியிருப்பதோடு, கற்பித்தல் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனால், பாதிப்புக்குள்ளாகும் பள்ளிகள் மட்டும், மழைநீர் வெளியேற்றி, இயல்பு நிலை திரும்பும் வரை, விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம் என, தலைமையாசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், '' பள்ளி திறப்பதற்கு முன்பே, பழுதடைந்த 140 வகுப்பறைகள், 68 கழிவறைகள் இடிக்கும் பணிகள் துவங்கப்பட்டன. ''இக்கட்டடங்கள் உள்ள பள்ளிகளில், மாணவர்கள் செல்ல முடியாத அளவுக்கு தடுப்பு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழையால் சேதமடையும் பட்சத்தில், குறிப்பிட்ட பள்ளிகள் விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X