எதிர்ப்புக்கு பணிந்தது பாக்., கோவில் நிலம் ஒதுக்கீடு

Added : நவ 10, 2021
Share
Advertisement
இஸ்லாமாபாத்,:ஹிந்து கோவிலுக்கு ஒதுக்கிய நிலத்தை ரத்து செய்த பாக்., அரசு, பலத்த எதிர்ப்பால் மீண்டும் நிலத்தை ஒதுக்கி உள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாதில் முதன் முதலாக ஹிந்து கோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிலம் 2016ல் ஒதுக்கப்பட்டது. இங்கு கோவில், சமுதாய கூடம் ஆகியவற்றை கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பாக்., அமைச்சரவைக் குழு

இஸ்லாமாபாத்,:ஹிந்து கோவிலுக்கு ஒதுக்கிய நிலத்தை ரத்து செய்த பாக்., அரசு, பலத்த எதிர்ப்பால் மீண்டும் நிலத்தை ஒதுக்கி உள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாதில் முதன் முதலாக ஹிந்து கோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிலம் 2016ல் ஒதுக்கப்பட்டது. இங்கு கோவில், சமுதாய கூடம் ஆகியவற்றை கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பாக்., அமைச்சரவைக் குழு கூட்டத்தில், அரசு ஒதுக்கிய நிலங்களில் கட்டுமானப் பணிகள் நடக்காத பட்சத்தில் அவற்றை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, இந்தாண்டு பிப்.,ல் இஸ்லாமாபாத் ஹிந்து கோவிலுக்கான நில ஒதுக்கீட்டை அதிகாரிகள் ரத்து செய்தனர். இதை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கிலும், கட்டுமானம் நடக்காததால் நில ஒதுக்கீட்டை ரத்து செய்ததாக, இஸ்லாமாபாத் மாநகராட்சி தெரிவித்தது. இதையடுத்து சமூக ஊடகங்களில் இஸ்லாமாபாத் நகர வளர்ச்சி ஆணையத்திற்கு எதிராக கண்டனக் குரல்கள் கிளம்பின.

இந்நிலையில் இஸ்லாமாபாத் நகர வளர்ச்சி ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் சையத் ஆசிப் ராசா கூறியதாவது:அரசு ஒதுக்கிய நிலங்களில் கட்டுமான பணிகள் நடக்காத நிலங்கள் தான் திரும்ப எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் இஸ்லாமாபாத் ஹிந்து கோவிலுக்கு இது பொருந்தாது. ஏனெனில் கோவிலைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதிகாரிகள் அதை கருத்தில் கொள்ளாமல் நில ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளனர். மீண்டும் அந்த நிலத்தை கோவிலுக்கு ஒதுக்க உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புனரமைக்கப்பட்டதுகடந்த ஆண்டு பாக்.,ல், கைபர் பக்துன்க்வா மாகாணம் தெரி கிராமத்தில் பழமையான பரமஹம்சர் மகராஜ் கோவில், ஜமாத் - இ - இஸ்லாம் - பசல் என்ற அமைப்பினரால் சூறையாடப்பட்டு, இடிக்கப்பட்டது. இக்கோவிலை மீண்டும் கட்டித் தர உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது உத்தரவிட்டார். அதன்படி புனரமைக்கப்பட்ட கோவிலை குல்சார் அகமது திறந்து வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X