இந்தியா

பள்ளி ஆசிரியர் மனைவி கழுத்தறுத்து தற்கொலை

Added : நவ 10, 2021
Share
Advertisement
காரைக்கால்:காரைக்காலில், அரசு பள்ளி ஆசிரியரின் மனைவி, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி காரைக்கால், கோட்டுச்சேரி, அரசு குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர், 44; மாற்றுத் திறனாளியான இவர், அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி லோகசர்மா, 36. மகதி, 9 என்ற மகள் உள்ளார்.லோகசர்மா, அடிக்கடி கோபத்தில் கணவர் மற்றும் உறவினர்களை திட்டுவது வழக்கம். இதனால் ஜெய்சங்கர்,

காரைக்கால்:காரைக்காலில், அரசு பள்ளி ஆசிரியரின் மனைவி, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி காரைக்கால், கோட்டுச்சேரி, அரசு குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர், 44; மாற்றுத் திறனாளியான இவர், அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி லோகசர்மா, 36. மகதி, 9 என்ற மகள் உள்ளார்.லோகசர்மா, அடிக்கடி கோபத்தில் கணவர் மற்றும் உறவினர்களை திட்டுவது வழக்கம். இதனால் ஜெய்சங்கர், லோகசர்மாவை மனநல மருந்துவரிடம் காண்பித்து, சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் ஜெய்சங்கர், வெளியே சென்றிருந்தார். வீட்டில் லோகசர்மா மற்றும் மகதி இருந்தனர். அப்போது, லோகசர்மா தன் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோட்டுச்சேரி போலீசார் விசாரணையில், மகள் மகதியை லோகசர்மா கழுத்தை நெரித்ததில், அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X