பள்ளியில் தீ விபத்து 20 குழந்தைகள் பலி

Added : நவ 10, 2021
Share
Advertisement
நியாமி:நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாயினர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரின் இரண்டாவது பெரிய நகரம் மராடி. இங்குள்ள ஒரு நர்சரி மற்றும் துவக்கப் பள்ளி வகுப்பறையின் வைக்கோல் கூரையில் திடீரென தீப்பற்றியது. அடுத்தடுத்த வகுப்பறைகளுக்கும் நெருப்பு வேகமாக பரவியது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அதற்குள் 20க்கும் மேற்பட்ட

நியாமி:நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாயினர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரின் இரண்டாவது பெரிய நகரம் மராடி. இங்குள்ள ஒரு நர்சரி மற்றும் துவக்கப் பள்ளி வகுப்பறையின் வைக்கோல் கூரையில் திடீரென தீப்பற்றியது. அடுத்தடுத்த வகுப்பறைகளுக்கும் நெருப்பு வேகமாக பரவியது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அதற்குள் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் தீயில் கருகி பலியாயினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த உயிர் பலிகள், தற்காலிக வகுப்பறைகளின் ஆபத்தை உணர்த்துவதாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் அறிய விசாரணை துவங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X