தமிழ்நாடு

வீடுகளை காலி பண்ணுங்க... பாதுகாப்பான இடத்துக்கு போங்க! தெற்கு கோட்டாட்சியர் எச்சரிக்கை

Added : நவ 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை: சிங்காநல்லுாரில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும், வீட்டு வசதி வாரிய வீடுகளை காலி செய்து வெளியேறுமாறு, கோவை தெற்கு கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார்.கோவை சிங்காநல்லுார் உழவர் சந்தைக்கு பின்பகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டி, விற்பனை செய்த 960 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் பல சிதிலமடைந்து, குடியிருப்பதற்கு



கோவை: சிங்காநல்லுாரில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும், வீட்டு வசதி வாரிய வீடுகளை காலி செய்து வெளியேறுமாறு, கோவை தெற்கு கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார்.கோவை சிங்காநல்லுார் உழவர் சந்தைக்கு பின்பகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டி, விற்பனை செய்த 960 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் பல சிதிலமடைந்து, குடியிருப்பதற்கு லாயக்கற்று உள்ளது.சிதிலமடைந்த 48 வீடுகளை தவிர்த்து, மற்ற வீடுகளில் அந்தந்த வீட்டு உரிமையாளர்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில், சிதிலமடைந்த குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அதற்கு பதிலாக, புதிய குடியிருப்புகளை கட்டித்தருவதாக, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி உறுதியளித்துள்ளார்.இதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் சூழலில், தற்போது கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான சிதிலமடைந்த வீடுகளில், மழைநீர் தேங்கி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.அதனால் அங்கு சென்ற தெற்கு கோட்டாட்சியர் இளங்கோ தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், குடியிருப்போர் அனைவரும், மழை நிற்கும் வரை பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் வீட்டு உரிமையாளர்கள் வீட்டை விட்டு வெளியேற மனமின்றி, அங்கேயே இருந்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-நவ-202115:08:00 IST Report Abuse
Ram Pollachi Please don't repeat the same comment
Rate this:
Cancel
10-நவ-202115:08:08 IST Report Abuse
Ram Pollachi PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X