கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வழக்கறிஞர் பதிவிற்கு வழிகாட்டுதல் உருவாக்க வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : நவ 10, 2021
Share
Advertisement
மதுரை:வெளிமாநிலங்களில் எல்.எல்.பி.,படித்ததாக போலி சான்று பெற்று வழக்கறிஞர்களாக பதிவு செய்வதை தடுக்க வழிகாட்டுதல் உருவாக்க தாக்கலான வழக்கில் பார் கவுன்சில் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தைச் சேர்ந்த சிலர் வேலைபார்த்துக் கொண்டே ஆந்திரா, கர்நாடகா சட்டக் கல்லுாரிகளில்

மதுரை:வெளிமாநிலங்களில் எல்.எல்.பி.,படித்ததாக போலி சான்று பெற்று வழக்கறிஞர்களாக பதிவு செய்வதை தடுக்க வழிகாட்டுதல் உருவாக்க தாக்கலான வழக்கில் பார் கவுன்சில் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தைச் சேர்ந்த சிலர் வேலைபார்த்துக் கொண்டே ஆந்திரா, கர்நாடகா சட்டக் கல்லுாரிகளில் வகுப்பிற்குச் செல்லாமல் எல்.எல்.பி.,படித்ததாக போலி சான்று பெறுகின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்கின்றனர்.

சரியாக ஆய்வு செய்யாமல் அவர்களுக்கு காவல்துறை தடையில்லாச் சான்று வழங்குகிறது. இவர்களுக்கும், உண்மையில் சட்டம் படித்து வழக்கறிஞர்களானவர்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடுகிறது.வழக்கறிஞர்களாக பதிவு செய்வோரின் பின்புலத்தை டி.எஸ்.பி.,அந்தஸ்திலான அதிகாரி விசாரித்து சான்றளிக்க வேண்டும்.

போலிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கென வழிகாட்டுதல்களை உருவாக்க பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு முத்துக் குமார் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு: மனுவை தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர், டி.ஜி.பி.,பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X