கால்நடை மருத்துவமனைகளில் இயங்காதகுளிர்சாதன அறைகள், பெட்டிகள்| Dinamalar

கால்நடை மருத்துவமனைகளில் இயங்காதகுளிர்சாதன அறைகள், பெட்டிகள்

Added : நவ 10, 2021
Share
மதுரை:தமிழகத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் மதுரை உட்பட பெரும்பாலான மாவட்ட கால்நடை மருத்துவமனைகளில் மருந்துகள் இருப்பு வைக்கும் 'வாக்கின் கூலர்' என்ற குளிர்சாதன அறைகள், குளிர்சாதன பெட்டிகள் இயங்காமல் வீணாக கிடக்கிறது.இது குறித்து ஓராண்டாக தலைமை அலுவலகத்திற்கு தகவல்கள் அனுப்பியும் பலனில்லை. கால்நடை தடுப்பூசி மருந்து

மதுரை:தமிழகத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் மதுரை உட்பட பெரும்பாலான மாவட்ட கால்நடை மருத்துவமனைகளில் மருந்துகள் இருப்பு வைக்கும் 'வாக்கின் கூலர்' என்ற குளிர்சாதன அறைகள், குளிர்சாதன பெட்டிகள் இயங்காமல் வீணாக கிடக்கிறது.

இது குறித்து ஓராண்டாக தலைமை அலுவலகத்திற்கு தகவல்கள் அனுப்பியும் பலனில்லை. கால்நடை தடுப்பூசி மருந்து இருப்பு வைக்க பயன்படும் குளிர்சாதன அறை, பாதுகாப்பு பெட்டிகள் இயங்காததால் தடுப்பூசி சேமித்து, குறித்த நேரத்தில் எடுத்து பயன்படுத்த முடியவில்லை.

மாவட்ட தலைமையிடத்தில் உள்ள மொத்த தடுப்பூசி மருந்துகள் அங்குள்ள குளிர்சாதன அறையில் வைக்கப்படும் பின், அதில் இருந்து வட்ட வாரியாக சில கால்நடை மருத்துவமனை களுக்கு கொண்டு சென்று அங்குள்ள குளிர்சாதன பெட்டிகளில் இருப்பு வைக்கப்படும். அது பெரும்பாலான இடங்களில் செயலற்ற நிலையில் தான் உள்ளது.

இதனால் கால்நடை டாக்டர்கள், ஆய்வாளர்கள் தடுப்பூசி மருந்துகளை தங்கள் வீட்டில், கால்நடை மருந்தக குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து செல்கின்றனர். இதை சரி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்தாததால் கால்நடை பணியாளர்கள், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர் என துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரை மண்டல கால்நடை துறை இணை இயக்குனர் நடராஜகுமார் கூறியதாவது:மதுரை மண்டலத்தில் 76 இடங்களில் குளிர்சாதன பெட்டிகள் செயல்படுகிறது.10 இடங்களில் பழுதான பெட்டிகள் பழுதுநீக்கப்படும். பழுதான மதுரை மருத்துவமனை குளிர்சாதன அறையை புதிதாக மாற்ற கேட்டுள்ளோம். தற்போது திருமங்கலம் குளிர்சாதன அறையில் மருந்துகள் இருப்பு வைக்கப்படுகிறது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X