கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரசு நிலத்தில் மண் திருட்டு தடுக்க நடவடிக்கை என்ன: கலெக்டர் அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : நவ 10, 2021
Share
Advertisement
மதுரை:பழநி அருகே அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.பழநி அருகே கே.வேலுார் அசோக் குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:பெரியம்மாபட்டியில் அரசுக்குச் சொந்தமான உபரி நிலம் உள்ளது. இதை அரசுத் தரப்பில் பராமரிக்கவில்லை. இதனால் சிலர் அங்கு சட்டவிரோதமாக மண்

மதுரை:பழநி அருகே அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பழநி அருகே கே.வேலுார் அசோக் குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:

பெரியம்மாபட்டியில் அரசுக்குச் சொந்தமான உபரி நிலம் உள்ளது. இதை அரசுத் தரப்பில் பராமரிக்கவில்லை. இதனால் சிலர் அங்கு சட்டவிரோதமாக மண் அள்ளுகின்றனர். செங்கல் தயாரிப்பிற்கு கொண்டு செல்கின்றனர். அவர்கள் அரசியல் செல்வாக்குமிக்கவர்கள்.மண் அள்ள அரசுத் தரப்பில் உரிமம் வழங்கவில்லை.

மண் அள்ளிச் சென்ற லாரிகளை மக்கள் மறித்தனர். வருவாய்த்துறை, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். நடவடிக்கை இல்லை. லாரிகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. போலீசார் வழக்குப் பதியவில்லை. திண்டுக்கல் கலெக்டர், பழநி தாலுகா போலீசாரிடம் புகார் செய்தேன். சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அசோக்குமார் மனு செய்தார்.


நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல் முருகன் அமர்வு

:

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில்தான் அதிகளவு மணல் திருட்டு நடப்பது எங்களுக்குத் தெரியும் என அதிருப்தி வெளியிட்டனர்.அரசுத் தரப்பு: போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். மண், மணல் திருட்டை தடுக்க தாலுகா அளவில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.

நீதிபதிகள்:

பெரியம்மாபட்டியில் சட்டவிரோதமாக எவ்வளவு மண் எடுக்கப்பட்டுள்ளது, வழக்கின் தற்போதைய நிலை, மண் திருட்டை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து திண்டுக்கல் கலெக்டர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X