அரசியல் செய்தி

தமிழ்நாடு

குளறுபடிகளுக்கு காரணமே அ.தி.மு.க., தான்: அமைச்சர் செந்தில்பாலாஜி ஆவேசம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
கோவை: ''கடந்த காலங்களில், அ.தி.மு.க., அரசு சரிவர செயல்பட்டிருந்தால் தற்போது பிரச்னைகள் இருந்திருக்காது,'' என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் உள்ள சரவணம்பட்டி, மணியகாரம்பாளையம், கணபதி, பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத் துறை அமைச்சர்



கோவை: ''கடந்த காலங்களில், அ.தி.மு.க., அரசு சரிவர செயல்பட்டிருந்தால் தற்போது பிரச்னைகள் இருந்திருக்காது,'' என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் உள்ள சரவணம்பட்டி, மணியகாரம்பாளையம், கணபதி, பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நேற்று மனுக்களை பெற்றார்.இதன் பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் 150 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதுவரை, 44 இடங்களில் மக்கள் சபை நடத்தப்பட்டு, 27 ஆயிரத்து, 374 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.பருவமழை காலத்தில்,சீரான மின்வினியோகம் வழங்க வேண்டும் என, முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மின்சார துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.ஒரு லட்சம் மின்கம்பங்கள், அதற்கான உதிரிபாகங்கள் தயார் நிலையில் உள்ளன. மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.'மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை,'என எதிர்கட்சியினர் கூறுகின்றனர். என்னென்ன நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை எதிர்கட்சியினர் கூறவேண்டும். முந்தைய அ.தி.மு.க.,ஆட்சியில் சரியாக செயல்பட்டிருந்தால், தற்போது இதுபோன்ற குளறுபடிகள், தேக்க நிலைகள் வந்திருக்காது.இவ்வாறு, அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.பேட்டியின் போது, கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X