கோர்ட் செய்தி

தமிழ்நாடு

முதுகுளத்தூருக்கு வைகை நீர் கோரி வழக்கு: அரசிடம் பதில் கோரும் உயர்நீதிமன்றம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
மதுரை:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் உட்பட 3 தாலுகாக்களுக்கு வைகை ஆற்று தண்ணீரை வினியோகிக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.முதுகுளத்துார் பிரபு தாக்கல் செய்த பொதுநல மனு: முதுகுளத்துார், கமுதி, கடலாடி தாலுகா விவசாயிகளுக்கு வைகை ஆற்று பாசன உரிமை இல்லை என பொதுப்பணித்துறையினர் கூறுகின்றனர்.'பழைய

மதுரை:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் உட்பட 3 தாலுகாக்களுக்கு வைகை ஆற்று தண்ணீரை வினியோகிக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

முதுகுளத்துார் பிரபு தாக்கல் செய்த பொதுநல மனு: முதுகுளத்துார், கமுதி, கடலாடி தாலுகா விவசாயிகளுக்கு வைகை ஆற்று பாசன உரிமை இல்லை என பொதுப்பணித்துறையினர் கூறுகின்றனர்.'பழைய ஆயக்கட்டுதாரர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது,' எனக்கூறி புதிய ஆயக்கட்டுதாரர்களான முதுகுளத்துார், கமுதி, கடலாடி தாலுகாக்களை சேர்க்க மறுக்கின்றனர்.

வறட்சியான இப்பகுதிகளில் வேலையின்மையால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. மக்கள் பிழைப்பு தேடி வெளியூர்களுக்குச் செல்கின்றனர்.இத்தாலுகாக்களுக்கு வைகை தண்ணீரை வினியோகிக்க தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பிரபு மனு செய்தார்.

நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு தமிழக தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், ராமநாதபுரம் கலெக்டர் நவ.,30 ல் பதில் மனு தாக்கல் செய்யஉத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X