பொது செய்தி

தமிழ்நாடு

பத்மஸ்ரீ விருது பெற்ற ஆய்க் குடி ராமகிருஷ்ணனுக்கு வரவேற்பு

Added : நவ 10, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மதுரை:மாற்று திறனாளிகளுக்கான சிறந்த சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற தென்காசியை சேர்ந்த ஆய்க் குடி ராமகிருஷ்ணனுக்கு மதுரை விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.தென்காசிமாவட்டம் ஆய்குடியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 68. பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கும்போது 1975ல் கடற்படை உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு முதுகுத் தண்டில் அடிபட்டு அதன் பிறகு
 பத்மஸ்ரீ விருது பெற்ற  ஆய்க் குடி ராமகிருஷ்ணனுக்கு  வரவேற்பு

மதுரை:மாற்று திறனாளிகளுக்கான சிறந்த சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற தென்காசியை சேர்ந்த ஆய்க் குடி ராமகிருஷ்ணனுக்கு மதுரை விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்காசிமாவட்டம் ஆய்குடியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 68. பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கும்போது 1975ல் கடற்படை உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு முதுகுத் தண்டில் அடிபட்டு அதன் பிறகு கழுத்துக்கு கீழ் செயல்படாத நிலை ஏற்பட்டது.

டாக்டர் அமர் உந்துதலால் தென்காசி அருகே ஆய்க்குடி கிராமத்தில் 1981ல் அமர்சேவா சங்கம் தொடங்கினார். தற்போது 300க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மற்றும் பார்வையற்றோருக்கான புத்தகம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். 4000 பேர் பயிலும் சிவ சரஸ்வதி வித்யாலயா கல்வி பணியை செய்து வருகிறார்.

இவரது சேவையை பாராட்டி தமிழக, மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. ராமகிருஷ்ணன் கூறுகையில்,'' பத்மஸ்ரீ விருது பெற்றது பெருமையாக உள்ளது. பிரதமர் என்னிடம் பேசியது மகிழ்ச்சி மற்றும் உற்சாகமளிக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான துறையை முதல்வர் ஸ்டாலின் தனது பொறுப்பில் வைத்துள்ளார்.

ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ்ஸ்டாண்டுகளில் மாற்று திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தந்தால் உதவியாக இருக்கும். வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்,'' என்றார்.அட்சய பாத்திரம், பாரதி யுவகேந்திரா சார்பில் அதன் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
15-நவ-202112:29:12 IST Report Abuse
Rasheel செயற்கரிய செய்வர் பெரியர்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-நவ-202104:53:32 IST Report Abuse
J.V. Iyer அருமை.. அருமை. ஆய்க் குடி ராமகிருஷ்ணனுக்கு எங்களது இதயபூர்வமான பாராட்டுக்கள். இவர்களைபோன்றவர்களால் ஹிந்துஸ்தான் பெருமை அடைகிறது. வாழ்க ஹிந்துஸ்தான்.
Rate this:
Cancel
R Hariharan - Hyderabad,இந்தியா
11-நவ-202109:33:17 IST Report Abuse
R Hariharan வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X