கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இலங்கையிலிருந்து கைதியை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை: உயர்நீதிமன்றத்தில் தகவல்

Added : நவ 10, 2021
Share
Advertisement
மதுரை:ராமநாதபுரம் கைதியை இலங்கையிலிருந்து தமிழக சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் மெஹருநிஷா தாக்கல் செய்த மனு:எனது கணவர் ரிபாயுதீன். மீனவரான இவரை போதைப் பொருள் வழக்கில் இலங்கை போலீசார் 2013 ல் கைது செய்தனர். அவர் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை

மதுரை:ராமநாதபுரம் கைதியை இலங்கையிலிருந்து தமிழக சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் மெஹருநிஷா தாக்கல் செய்த மனு:எனது கணவர் ரிபாயுதீன். மீனவரான இவரை போதைப் பொருள் வழக்கில் இலங்கை போலீசார் 2013 ல் கைது செய்தனர். அவர் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளார். அவருக்கு சட்ட உதவி கிடைக்கவில்லை.

நாங்கள் வறுமையில் வாடுகிறோம்.இந்தியா-இலங்கை இடையே கைதிகளை பரிமாறிக் கொள்ள வழிவகை உள்ளது. கணவரை இந்திய சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு விசாரித்தது.மத்திய அரசுத் தரப்பு: ரிபாயுதீனை அழைத்துவர 2 போலீசாரை தமிழக அரசு நியமித்துள்ளது. அவர்கள் மூலம் அவரை இங்கு அனுப்பி வைக்க இலங்கை அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தது. நீதிபதிகள் நவ.,30 க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X