பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை சிறை கைதிகளிடம் என்.ஐ.ஏ., விசாரணை

Added : நவ 10, 2021
Share
Advertisement
மதுரை:கனடாவிற்கு இலங்கை தமிழர்களை திருட்டுத்தனமாக அனுப்பிய வழக்கில் மதுரை சிறையிலுள்ள இரு கைதிகளிடம் தேசிய புலனாய்வு குழுவினர்(என்.ஐ.ஏ.,) ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்தனர்.இலங்கையிலிருந்து கள்ளத்தனமாக இந்தியா வழியாக கனடா செல்ல இலங்கை தமிழர்கள் மதுரையில் தங்கியிருந்தனர். அவர்கள் கனடா செல்ல உதவியாக செயல்பட்டவர்கள் உள்ளிட்ட 9 பேரை கியூ பிராஞ்ச் போலீசார்

மதுரை:கனடாவிற்கு இலங்கை தமிழர்களை திருட்டுத்தனமாக அனுப்பிய வழக்கில் மதுரை சிறையிலுள்ள இரு கைதிகளிடம் தேசிய புலனாய்வு குழுவினர்(என்.ஐ.ஏ.,) ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்தனர்.

இலங்கையிலிருந்து கள்ளத்தனமாக இந்தியா வழியாக கனடா செல்ல இலங்கை தமிழர்கள் மதுரையில் தங்கியிருந்தனர். அவர்கள் கனடா செல்ல உதவியாக செயல்பட்டவர்கள் உள்ளிட்ட 9 பேரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதே வழக்கில் தொடர்புடைய 23 பேர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் மதுரை சிறையில் உள்ள துாத்துக்குடி ஆனந்தராஜ், ஸ்டார்வின் ஆகியோரிடம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் என்.ஐ.ஏ., குழுவினர் நீதிமன்றம் அனுமதி பெற்று, சிறையில் கண்காணிப்பாளர் அறையில் விசாரணை நடத்தினர். சிறை அதிகாரிகள் அனுமதிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X