தமிழ்நாடு

'காற்றாலையில் கூடுதல் மின் உற்பத்தி'

Added : நவ 10, 2021
Share
Advertisement
கோவை: ''காற்றாலை மூலம் கூடுதல் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது,'' என, இந்திய காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கஸ்துாரி ரங்கையன் தெரிவித்தார்.தமிழகம் காற்றாலை மின் உற்பத்தியில் சிறந்த மாநிலமாக முன்னிலை வகிக்கிறது. மாநிலத்தில் 9,500 மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு உள்ளன.ஆண்டுதோறும் மே இறுதியில் துவங்கி அக்., மாதம் வரை காற்றாலை

கோவை: ''காற்றாலை மூலம் கூடுதல் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது,'' என, இந்திய காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கஸ்துாரி ரங்கையன் தெரிவித்தார்.தமிழகம் காற்றாலை மின் உற்பத்தியில் சிறந்த மாநிலமாக முன்னிலை வகிக்கிறது. மாநிலத்தில் 9,500 மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு உள்ளன.ஆண்டுதோறும் மே இறுதியில் துவங்கி அக்., மாதம் வரை காற்றாலை மின்உற்பத்திக்கான சீசனாக உள்ளது. ஆனால், நடப்பாண்டு சீசன், ஏப்ரலில் முன்கூட்டியே துவங்கியது. முதல் இரு மாதங்களில் காற்று சீராக இல்லாதததால் மின் உற்பத்தியில் ஏற்ற, இறக்கம் இருந்தது. ஆடி மாதம் அதிகளவில் மின் உற்பத்தி கிடைத்துள்ளது.இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத்தலைவர், கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:காற்றாலை மின் உற்பத்தி கடந்த நிதியாண்டில், 100 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பாண்டு அக்., வரையிலான தென்மேற்கு பருவகாற்று காலத்தில், 100 கோடி யூனிட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கி மழைப்பொழிவால், காற்றின் வேகம் குறைந்துள்ளது. இருப்பினும், காற்றாலை மின்உற்பத்தி தொடர்ந்து நடத்து வருகிறது. இதனால், நடப்பு நிதியாண்டின் மார்ச்குள் மொத்த மின்உற்பத்தி, 110 கோடி யூனிட்டை தாண்டிவிடும்.இவ்வாறு, கஸ்துாரி ரங்கையன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X