தமிழ்நாடு

கம்ப்யூட்டர் பட்டா திருத்த சிறப்பு முகாம்  மாவட்டத்தில் இன்றும், 12ம் தேதியும்...

Added : நவ 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை: கம்ப்யூட்டர் பட்டாவில் உள்ள திருத்தம் தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம், இன்று மற்றும் 12ம் தேதி நடக்கிறது.கோவை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி, பொதுமக்கள் கம்ப்யூட்டர் பட்டாவில் உள்ள திருத்தம் தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவில் சிறப்பு

கோவை: கம்ப்யூட்டர் பட்டாவில் உள்ள திருத்தம் தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம், இன்று மற்றும் 12ம் தேதி நடக்கிறது.கோவை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி, பொதுமக்கள் கம்ப்யூட்டர் பட்டாவில் உள்ள திருத்தம் தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.இச்சிறப்பு முகாமில் கம்ப்யூட்டர் பட்டாவில் நில அளவை மற்றும் உட்பிரிவு எண் திருத்தம், பரப்பு திருத்தம், பட்டாதாரர் பெயர், உறவினர் பெயரில் திருத்தம், பட்டாவில் உறவுமுறையில் திருத்தம், பரப்பு/பெயர் ஒரு பட்டாதாரருக்கும் பக்கத்து பட்டாதாரருக்கும் இடையே மாறுபடுதல், பட்டா பெயர் மாற்றம் (உட்பிரிவு இல்லாதவை) ஆகிய திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.இதன்படி இந்த வாரம், இன்று (10ம் தேதி) சிக்காரம்பாளையம் கிராமம், அன்னுார், பெரியநாயக்கன்பாளையம், சூலுார், ராசிப்பாளையம், பாலத்துறை/நாச்சிபாளையம்/கருஞ்சாமிகவுண்டம்பாளையம்/தம்பாக்கவுண்டம்பாளையம், ஜாகீர்நாயக்கன்பாளையம், வேட்டைகாரன்புதுார், புளியம்பட்டி/ கிட்டசூரம்பாளையம், பொட்டையாண்டிபுரம்பு/குதிரையாலம்பாளையம் கிராமங்களில் நடக்கிறது.அதேபோன்று, 12ம் தேதி மருதுார், கள்ளிப்பாளையம்/ வெள்ளானைப்பட்டி, 4 வீரபாண்டி, வாரப்பட்டி/வடவேடம்பட்டி, பிச்சனுார், பேரூர் செட்டிப்பாளையம், சோமந்துறை/தென்சித்துார்/ பெத்தநாயக்கனுார்/தென்சங்கம்பாளையம், புரவிபாளையம்/ சேர்வைக்காரன்பாளையம்/ வடக்கிபாளையம், நல்லட்டிபாளையம்/ செட்டியக்காபாளையம் ஆகிய கிராமங்களில் நடக்க உள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-நவ-202105:59:00 IST Report Abuse
சூரியா வருவாய்த்துறையின் பெரிய கொள்ளை இந்த விஷயம். நல்லா இருந்த பட்டாக்களை கம்ப்யூட்டரில் ஏற்றுகிறேன் என்று, வேண்டும் என்றே பல தவறுகளுடன் ஏற்றுகிறார்கள். ஆன்லைன் பட்டாவில் உள்ள தவறைச் சுட்டிக்காட்டினால், இந்த தவறை தாசில்தார் தீர்க்க வேண்டும் அதற்கு ரேட் இவ்வளவு, இந்த தவறு RDO மேட்டர்: அதை சரிசெய்ய சாதாரண RDO ரேட் இவ்வளவு, direct RDO என்றால் அதிக பணம் என வசூலில் திளைக்கிறார்கள். அரசு ஆணை மூலம் பட்டா மாற்றங்கள், நிலப் பதிவின் பிறகு தானாகவே நடக்க வேண்டும் என்பதால் நின்று போன வருமானத்தை, இந்த வழியில் ஈடு கட்டுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X