பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கும்

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை:இன்று காலை முதல் பல மாவட்டங்களில், மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், விடிய, விடிய மழை கொட்ட அதிக வாய்ப்புள்ளதாக வானிலை குறிப்புகள் தெரிவித்துள்ளன.வங்க கடலின் காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகன மழையை கொட்டும் என, சென்னை வானிலை ஆய்வு மையம், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.மழை எந்த

சென்னை:இன்று காலை முதல் பல மாவட்டங்களில், மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், விடிய, விடிய மழை கொட்ட அதிக வாய்ப்புள்ளதாக வானிலை குறிப்புகள் தெரிவித்துள்ளன.வங்க கடலின் காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகன மழையை கொட்டும் என, சென்னை வானிலை ஆய்வு மையம், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை எந்த நேரத்தில் இருந்து, எந்த பகுதிகளுக்கு பரவும் என்பதற்கான, செயற்கை கோள் படம் அடிப்படையிலான தோராய கணிப்பு:

* திருநெல்வேலி, ராமநாதபுரம், துாத்துக்குடி, நாகை, கடலுார், புதுச்சேரி, சென்னை என கடலோர மாவட்டங்கள் முழுதும், இன்று மதியம் 1:00 மணி முதல் மழை தீவிரம் அடையும். மாலையில் திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

நாகை துவங்கி கடலுார், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், மழை தீவிரம் அடைந்து, இன்று இரவு முழுதும் விடிய, விடிய கொட்ட வாய்ப்புள்ளது

* தஞ்சை, பெரம்பலுார், அரியலுார், கடலுார், திருவண்ணாமலை, புதுச்சேரி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், நாளை அதிகாலை வரை அதி கனமழை கொட்டும் வாய்ப்புள்ளது.

* நாளை பிற்பகல் வரை மிக கனமழையின் தாக்கம் நீடிக்கும். அதேநேரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று நள்ளிரவு முதல் வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு பரவி, அங்கும் கனமழை பெய்யும் என, செயற்கைகோள் படங்கள் அடிப்படையிலான, பல்வேறு வானிலை குறிப்புகள் தெரிவித்துள்ளன

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X