அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீட்டுக்கு ரூ.20 ஆயிரம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை:'வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும், 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:மாநிலத்தின் பல பகுதிகளில், கன மழை கொட்டி தீர்ப்பதன் காரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், காய்கறிகள் விலை விஷம் போல் உயர்ந்துள்ளது. தீபாவளி அன்று, 70 ரூபாய்க்கு

சென்னை:'வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும், 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:மாநிலத்தின் பல பகுதிகளில், கன மழை கொட்டி தீர்ப்பதன் காரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், காய்கறிகள் விலை விஷம் போல் உயர்ந்துள்ளது. தீபாவளி அன்று, 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட கிலோ தக்காளி, இன்று 100 ரூபாய்; கேரட் 100 ரூபாய், பீன்ஸ் 90 ரூபாய், கத்தரிக்காய் 85 ரூபாய், வெங்காயம் 70 ரூபாய் என்று விற்கப்படுகிறது.

இதனால், மக்கள் சிரமப்படுகின்றனர். காய்கறிகளை மலிவு விலையில் விற்க, தேவையான நடவடிக்கைகளை, மாநில அரசு எடுக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள், கன மழை காரணமாக, சென்னை திரும்ப முடியாத நிலை உள்ளது

.எனவே, இந்த மாதம் கட்ட வேண்டிய மின் கட்டணத்தை செலுத்த, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். மழை நீர் வடிந்த இடங்களில், மின் இணைப்பை விரைவாக வழங்க வேண்டும். வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக, 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X