நையாண்டி வீடியோ பதிவு பேரிடர் ஆணையம் குறும்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நையாண்டி வீடியோ பதிவு பேரிடர் ஆணையம் குறும்பு

Added : நவ 10, 2021
Share
கோவை:சென்னை மழை வெள்ளம் பற்றிய நையாண்டி வீடியோ, தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 'டுவிட்டர்' கணக்கில் பதிவேற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம், மழை, வெள்ள பாதிப்புகளை தடுப்பது, நிவாரண உதவி வழங்குவது, கொரோனா தடுப்பு என தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த ஆணையத்தின் டுவிட்டர் கணக்கை, 71 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.மழை வெள்ள பாதிப்பை
 நையாண்டி வீடியோ பதிவு பேரிடர் ஆணையம் குறும்பு

கோவை:சென்னை மழை வெள்ளம் பற்றிய நையாண்டி வீடியோ, தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 'டுவிட்டர்' கணக்கில் பதிவேற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம், மழை, வெள்ள பாதிப்புகளை தடுப்பது, நிவாரண உதவி வழங்குவது, கொரோனா தடுப்பு என தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த ஆணையத்தின் டுவிட்டர் கணக்கை, 71 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.மழை வெள்ள பாதிப்பை தவிர்ப்பது தொடர்பான அரசு அறிவிப்புகள், செயல்பாடுகள் அனைத்தும் இதில் உடனுக்குடன் வெளியாகின்றன.

நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு இந்த டுவிட்டர் கணக்கில், நையாண்டி வீடியோ ஒன்று பதிவேற்றப்பட்டது.'சென்னை பீப்பிள் ரைட் நவ்' என்ற தலைப்புடன் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோ, யு டியூப் பிரபலங்களால் தயார் செய்யப்பட்டது.

பியூஸ் கேரியரை பிரிட்ஜில் வைத்திருப்பதாகவும், பிரிட்ஜை பரண் மீது வைத்திருப்பதாகவும், காரை வேளச்சேரி பாலத்தில் நிறுத்தியிருப்பதாகவும், மனைவியை மொட்டை மாடியில் நிறுத்தியிருப்பதாகவும் கூறும் அந்த வீடியோ, சிரிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.

பொதுமக்கள் பலரும், பேரிடர் மேலாண்மை ஆணையம், தன்னைத் தானே நையாண்டி செய்து கொள்வதாக கருத்து பதிவிட்டனர். 2,900 பேர் பார்த்து, 201 பேரால் விருப்பக் குறியிடப்பட்டு, 50 பேர் மறுபகிர்வு செய்த அந்த வீடியோஆணையத்தின் டுவிட்டர் கணக்கில் இருந்து நீக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X