கோர்ட் செய்தி

தமிழ்நாடு

5 ஆண்டுகளில் செய்தது என்ன: சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் கேள்வி

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை:கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி என்ன செய்தது என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் தற்போதுள்ள நிலைமை சீரடையும் என்று நம்புவதாகவும் இல்லையென்றால் வழக்கை விசாரணைக்கு எடுப்பதாகவும் எச்சரித்தது.சென்னை மாநகராட்சி 10வது மண்டலம் ரெட்டிகுப்பம் சாலையில் நடைபாதைக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள சாலையோர பூங்காவை அகற்றக் கோரி பார்த்திபன் என்பவர் வழக்கு

சென்னை:கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி என்ன செய்தது என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் தற்போதுள்ள நிலைமை சீரடையும் என்று நம்புவதாகவும் இல்லையென்றால் வழக்கை விசாரணைக்கு எடுப்பதாகவும் எச்சரித்தது.

சென்னை மாநகராட்சி 10வது மண்டலம் ரெட்டிகுப்பம் சாலையில் நடைபாதைக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள சாலையோர பூங்காவை அகற்றக் கோரி பார்த்திபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இம்மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.

பொது நலனுக்கு எதிராக இருந்தால் நீதிமன்றம் தலையிடும் எனக்கூறிய முதல் பெஞ்ச் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இவ்வழக்கு விசாரணை முடிந்ததும் மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகா அசோக்கிடம் சென்னை நகரில் உள்ள வெள்ள பாதிப்பு குறித்து முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.தலைமை நீதிபதி கூறியதாவது: சென்னையில் 2015ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின் ஐந்து ஆண்டுகளாக மாநகராட்சி தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது; பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையை சென்னை நகரம் சந்தித்து இருக்கக் கூடாது.

சென்னையில் உள்கட்டமைப்பு வசதிக்காக ஏராளமாக செலவிடப்பட்டதாக அறிகிறோம். நிலைமை விரைவில் சீராகும் என்று நம்புகிறோம். இல்லையென்றால் நாங்களாகவே வழக்கை விசாரணைக்கு எடுப்போம்.இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனரிடம் தெரிவிப்பதாக வழக்கறிஞர் கார்த்திகா கூறினார். அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதாக அரசு பிளீடர் முத்துக்குமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X