அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுகாதார சீர்கேடு ராமதாஸ் எச்சரிக்கை

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை:'சென்னையில் துர்நாற்றம் அதிகரித்துள்ளதால் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளில் அரசு ஈடுபட வேண்டும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:சென்னையில் பெரும்பாலான இடங்களில் மூன்று நாட்களாகியும் இன்னும் மழைநீர் வடியாததும் பல இடங்களில் தேங்கியுள்ள நீரிலிருந்து துர்நாற்றம் வீச துவங்கி இருப்பதும் கவலை அளிக்கிறது. மற்ற

சென்னை:'சென்னையில் துர்நாற்றம் அதிகரித்துள்ளதால் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளில் அரசு ஈடுபட வேண்டும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:சென்னையில் பெரும்பாலான இடங்களில் மூன்று நாட்களாகியும் இன்னும் மழைநீர் வடியாததும் பல இடங்களில் தேங்கியுள்ள நீரிலிருந்து துர்நாற்றம் வீச துவங்கி இருப்பதும் கவலை அளிக்கிறது. மற்ற மாவட்டங்களில் இருந்து பணியாளர்களை வரவழைத்து மீட்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

மழைநீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்ற வேண்டும். துாய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.சென்னையின் அனைத்து வட்டங்களிலும் மருத்துவ முகாம்களை நடத்துவதற்கும் அரசும் மாநகராட்சியும் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். அடுத்தகட்ட மழைக்கு முன் சென்னையில் மழைநீர் அகற்றப்படாவிட்டால் மிகவும் மோசமாக சுகாதார சீர்கேடுகள் ஏற்படக் கூடும். இதை உணர்ந்து நிவாரண பணிகளை அரசு விரைவுப்படுத்த வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X