எளிமையான முறையில் நடந்தது மலாலா யூசுப்சை திருமணம்

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
பிர்மிஹாம்: நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சைக்கு பிரிட்டனில் எளிமையான முறையில் திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக, மலாலா யூசுப்சை மீது தலிபான் பயங்கரவாதிகள் 2012ல் தாக்குதல் நடத்தினர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார். இதையடுத்து அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள மலாலா, 23, கடந்த ஜனவரியில்
Malala Yousafzai, Her Partner Asser Announce Wedding In UK. See Pics

பிர்மிஹாம்: நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சைக்கு பிரிட்டனில் எளிமையான முறையில் திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக, மலாலா யூசுப்சை மீது தலிபான் பயங்கரவாதிகள் 2012ல் தாக்குதல் நடத்தினர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார். இதையடுத்து அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள மலாலா, 23, கடந்த ஜனவரியில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் திருமணம் எதற்காக என புரியவில்லை என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.


latest tamil newsஇந்நிலையில் அஸர் என்பவருடன் பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாமின் எளிமை முறையில் திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நேற்று (நவ.09) மலாலா யூசப்சை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் திருமண புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் , என் வாழ்வில் இது ஒரு பொன்னான நாள், அஸரும் நானும் வாழ்க்கைக்கு துணையாக இருக்க முடிவு செய்தோம். எங்கள் குடும்பத்துடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் ஒரு சிறிய நிக்கா விழாவைக் கொண்டாடினோம். உங்கள் ஆசீர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
13-நவ-202105:24:30 IST Report Abuse
NicoleThomson பார்ட்னர்ஷிப் கசந்து போய்விட்டது போல பந்தத்தில் இணைந்துள்ளாள் டூல்கிட் மாலா
Rate this:
Cancel
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
10-நவ-202122:26:13 IST Report Abuse
tata sumo i love china in this subject, they know how to control the population.
Rate this:
Cancel
10-நவ-202121:15:54 IST Report Abuse
theruvasagan அவிங்க வழக்கப்படி திருமணம் ஒரு ஒப்பந்தம் மட்டுமே. ஒப்பந்தம் எழுத்து பூர்வமா இருக்கணும்னா கையெழுத்து போட்டுத்தானே ஆகணும். அதுக்கு எதுக்கு ஈந்த உருட்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X