கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு 36,000 பேர் பலி கருணை தொகை வழங்க உத்தரவு

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை:'கொரோனா தொற்று பாதிப்பால், 36 ஆயிரத்து 220 பேர் பலியாகி உள்ளனர்; அவர்களின் குடும்பங்களுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் கருணை தொகை வழங்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை பேரிடராக அறிவித்துள்ளதால், பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க, அரசுக்கு உத்தரவிடக்கோரி, விஜய கோபால் என்பவர் உயர் நீதிமன்றத்தில்

சென்னை:'கொரோனா தொற்று பாதிப்பால், 36 ஆயிரத்து 220 பேர் பலியாகி உள்ளனர்; அவர்களின் குடும்பங்களுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் கருணை தொகை வழங்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை பேரிடராக அறிவித்துள்ளதால், பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க, அரசுக்கு உத்தரவிடக்கோரி, விஜய கோபால் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மதுரை மாவட்டம் மேலுார் தாலுகா, எட்டிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், 'கொரோனா வைரஸ் பாதிப்பால் 230 வழக்கறிஞர்கள் இறந்துள்ளனர். பேரிடர் மேலாண்மை சட்டப்படி, வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டது.இம்மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தன.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''குறைந்தபட்ச கருணை தொகை 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்றும். கொரோனா பாதிப்புக்கு 36 ஆயிரத்து 220 பேர் பலியாகி உள்ளனர்,'' என்றார்.

பின்னர் முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயை விரைந்து வழங்க வேண்டும். சில மாநிலங்களில் கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தொகைக்கும் அதிகமாக வழங்குவது தொடர்பாக, மாநில அரசு முடிவெடுக்க வேண்டும்.

அனைத்து மட்டங்களிலும் விரைந்து நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். விசாரணை, அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதற்குள், வழிமுறைகளுக்கான வரைவு நகல் தயாராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச தொகைக்கும் கூடுதலாக வழங்குவதாக இருந்தால் எவ்வளவு என்பதையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X