கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொன்முடி வழக்கு இன்றும் விசாரணை

Added : நவ 10, 2021
Share
Advertisement
விழுப்புரம்:உயர்கல்வி அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, இன்று 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. அவரது மனைவி விசாலாட்சி. இருவர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2006ல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்

விழுப்புரம்:உயர்கல்வி அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, இன்று 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. அவரது மனைவி விசாலாட்சி. இருவர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2006ல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது.

விசாரணைக்கு, அமைச்சர் பொன்முடி ஆஜரானார். விசாலாட்சி ஆஜராகவில்லை. இவ்வழக்கின் சாட்சிகளில், பழனிசாமி என்பவர் உடல் நலக்குறைவால் இறந்ததால், அவரது இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது.

மற்றொரு சாட்சியான, ஓய்வு பெற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கையண்ணன் உடல்நிலை சரியில்லாததால், அவரை ஆஜர்படுத்த முடியவில்லை. அதற்கான மருத்துவ சான்றிதழை போலீசார் சமர்ப்பித்தனர்.தொடர்ந்து, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக, இன்று 10ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X