பொது செய்தி

தமிழ்நாடு

இரவில் வெளியில் வர வேண்டாம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
சிதம்பரம்:சிதம்பரம் பகுதியில் அதிகளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரவு நேரத்தில் பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என டி.எஸ்.பி., ரமேஷ் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கடலுார் மாவட்டத்தில் இரண்டு தினங்கள் கன மழை இருக்கும் என்பதால் வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. சிதம்பரம் பகுதியில் வெள்ளம் பாதிக்குமிடங்கள் அதிகம் உள்ளதால் தமிழக பேரிடர் மீட்புக் குழுவினர்
 இரவில் வெளியில் வர வேண்டாம்

சிதம்பரம்:சிதம்பரம் பகுதியில் அதிகளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரவு நேரத்தில் பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என டி.எஸ்.பி., ரமேஷ் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலுார் மாவட்டத்தில் இரண்டு தினங்கள் கன மழை இருக்கும் என்பதால் வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. சிதம்பரம் பகுதியில் வெள்ளம் பாதிக்குமிடங்கள் அதிகம் உள்ளதால் தமிழக பேரிடர் மீட்புக் குழுவினர் வந்துள்ளனர்.டி.எஸ்.பி., ரமேஷ் ராஜ் கூறுகையில், தொடர் மழை காரணமாக எஸ்.பி., உத்தரவின் பேரில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளூர் போலீசாருடன் இணைந்து மூன்று குழுக்களாக முன்னேற்பாடு பணிகள் நடக்கின்றன.சிதம்பரத்தை சுற்றியுள்ள கொள்ளிடம், பழைய கொள்ளிடம், வெள்ளாறு, பரவனாறு ஆகிய ஆற்றுப் படுகையில் உள்ள வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

தொடர் மழை நேரத்தில் இரவு நேரங்களில் பொது மக்கள் வெளியே செல்ல வேண்டாம். வாய்க்கால்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் பொது மக்கள், சிறுவர்களும் குளிக்க வேண்டாம். அவசரத் தேவைகளுக்கு போலீசாரை தொடர்பு கொள்ளலாம், என்றார். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X