சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டமாவோயிஸ்டு தலைவர் குறித்து விசாரணை

Added : நவ 10, 2021
Share
Advertisement
வேலுார்:கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்ட மவோயிஸ்டு தலைவர் ராகவேந்திரா குறித்து போலீசார் வேலுாரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.கேரளா மாநிலம், நிலம்பூர் வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ராகவேந்திரா, 32, என்பவரை அம்மாநில போலீசார் கடந்த 6 ம் தேதி கைது செய்தனர். விசாரணையில், அவர் கேரளா மாநிலம், பாப்பினிசேரி பகுதியில் வசித்து வருவதும், மாவோயிஸ்டு

வேலுார்:கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்ட மவோயிஸ்டு தலைவர் ராகவேந்திரா குறித்து போலீசார் வேலுாரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலம், நிலம்பூர் வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ராகவேந்திரா, 32, என்பவரை அம்மாநில போலீசார் கடந்த 6 ம் தேதி கைது செய்தனர். விசாரணையில், அவர் கேரளா மாநிலம், பாப்பினிசேரி பகுதியில் வசித்து வருவதும், மாவோயிஸ்டு தலைவராக செயல்பட்டு வந்ததும், அவரது சொந்த ஊர் வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரி என்பதும் தெரியவந்தது.
இந்த விவரம் கேரளா மாநில போலீசார் மூலம் தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வேலுார் மாவட்ட கியூ பிரிவு போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:கேரளா போலீசாரால் கைதான மாவோயிஸ்டு தலைவர் ராகவேந்திரா, இரண்டு ஆதார் கார்டு வைத்திருக்கிறார். அதில் ஒரு கார்டில், வேலுார் மாவட்டம், வேலுார் சத்துவாச்சாரி, பகுதி ஒன்று என்ற முகவரி உள்ளது. இவரது தந்தை ராஜன். வணிகவரித்துறை அலுவலகத்தில் காசாளராக பணியாற்றி கடந்த 2003 ம் ஆண்டு இறந்தார். இதனால் அவரது தாத்தா கன்னியப்பன், 80, பாட்டி பார்வதியம்மாள், 74, ஆகியோர் ராகவேந்திராவை வளர்த்து வந்துள்ளனர்.
ராணிப்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி. காம்., 3 ம் ஆண்டு படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். 2010ம் ஆண்டு பிப்., மாதம் 11 ம் தேதி முதல் இவர் காணாமல் போயுள்ளார். இது குறித்து பாட்டி பார்வதியம்மாள் புகார்படி சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஆனால் 10 ஆண்டுகளாக ராகவேந்திராவை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் கடந்தாண்டு போலீசார் வவழக்கை முடித்துள்ளனர்.
தற்போது, ராகவேந்திரா எப்படி கேரளா வந்து மாவோயிஸ்ட் தலைவரானார், அவர் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், ரா பிரிவு போலீசார் விரைவில் வேலுார் சத்துவாச்சாரிக்கு வர உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X