சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ 5,000 லஞ்சம் வாங்கிய ஆவின் உதவி பொது மேலாளர் கைது

Added : நவ 10, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வேலுார்;5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆவின் உதவி பொது மேலாளர் மகேந்திர மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரியில் ஆவின் மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு உதவி பொது மேலாளராக மகேந்திர மால், 54, என்பவர் பணியாற்றி வருகிறார். வேலுாரை சேர்ந்தவர் ஜெகன், 45. இவர் ஆவின் ஒப்பந்தக்காரராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு 98 ஆயிரம் ரூபாய் பாக்கி வர
 ரூ 5,000 லஞ்சம் வாங்கிய ஆவின் உதவி பொது மேலாளர் கைது

வேலுார்;5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆவின் உதவி பொது மேலாளர் மகேந்திர மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரியில் ஆவின் மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு உதவி பொது மேலாளராக மகேந்திர மால், 54, என்பவர் பணியாற்றி வருகிறார். வேலுாரை சேர்ந்தவர் ஜெகன், 45. இவர் ஆவின் ஒப்பந்தக்காரராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு 98 ஆயிரம் ரூபாய் பாக்கி வர வேண்டியதிருந்தது. இந்த பணத்திற்கான காசோலை வழங்க உதவி பொது மேலாளர் மகேந்திர மால் அணுகினார். 5,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், காசோலையை கொடுப்பதாக கூறினார். லஞ்சம் தர விரும்பாத ஜெகன் வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயன பவுடர் தடவிய 5,000 ரூபாயை எடுத்துக் கொண்டு இன்று மாலை ஆவின் துணை மேலாளர் அலுவலகம் வந்த ஜெகன் மகேந்திர மாலிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான குழுவினர் கையும், களவுமாக மகேந்திர மாலை கைது செய்து செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.கைதன மகேந்திர மாலுக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
வேலூர் விஜிலென்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்ட வேலூர் ஆவின் உதவி பொது மேலாளர் மகேந்திரமால் வீட்டில் இருந்து ஒரு நாட்டு கைத்துப்பாக்கியும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
10-நவ-202108:12:26 IST Report Abuse
m.viswanathan இந்த மழை நேரத்திலும் இந்த ஆளுக்கு எப்படி கையை அரிக்குது, இதெற்கெல்லாம் சட்டதிருத்தம் செய்ய நயா பாரத்தில் வழியில்லையே
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
10-நவ-202104:10:28 IST Report Abuse
BASKAR TETCHANA இந்த மகேந்திர மால் 5000 லஞ்சம் வாங்கினார் என்றால் இவருக்கு மேல் உள்ளவருக்கு எவ்வளவு கிடைக்கும். அதை விட இந்த தீபாவளி நேரத்தில் நம்ப நாசர் எவ்வளவு வாங்கி இருப்பார்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
10-நவ-202102:40:48 IST Report Abuse
Bhaskaran கவலை வேண்டாம் கட்சிக்காரர்கள் அமைச்சர் உதவியால் வெளியில் வந்து மீண்டும் தன் பணிகளை தொடர்வார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X