பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடையை பாதுகாக்க அறிவுறுத்தல்

Added : நவ 10, 2021
Share
Advertisement
திருத்தணி : வடகிழக்கு பருவ மழையால் திருத்தணி வருவாய் கோட்டத்தில், மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.திருத்தணி கால்நடை உதவி இயக்குனர் எஸ். தாமோதரன் கூறியதாவது:மழைக் காலங்களில் விவசாயிகள் தங்களின் கால்நடைகளை மின் கம்பங்கள், மரத்தடியில், திறந்தவெளி மற்றும் பழுதடைந்த கொட்டகைகளில் கட்டி வைக்கக்கூடாது. கால்நடைகள் பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்க

திருத்தணி : வடகிழக்கு பருவ மழையால் திருத்தணி வருவாய் கோட்டத்தில், மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.திருத்தணி கால்நடை உதவி இயக்குனர் எஸ். தாமோதரன் கூறியதாவது:

மழைக் காலங்களில் விவசாயிகள் தங்களின் கால்நடைகளை மின் கம்பங்கள், மரத்தடியில், திறந்தவெளி மற்றும் பழுதடைந்த கொட்டகைகளில் கட்டி வைக்கக்கூடாது. கால்நடைகள் பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்க வேண்டும்.கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டாலும், இயற்கை சீற்றத்தால் கால்நடைகள் இறக்க நேரிட்டாலும், ஒன்றிய கால்நடை உதவி மருத்துவரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள், நீர்சத்து திரவங்கள் தயார் நிலையில் உள்ளன. நோய் தொற்று ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்காக, ஒரு ஒன்றியத்திற்கு, ஒரு மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், அவசரகால பயன்பாட்டிற்கு, உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் - 044 27885565 மற்றும் கால்நடை அவசர ஊர்தி எண்: 1962க்கு தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X