சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: 'கல்லா' கட்டலாம் கடைசி வரையில்!

Added : நவ 10, 2021 | கருத்துகள் (60)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில் அரசியல்வாதிகள், தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காலத்தில் தான் ஊழல் செய்து சொத்துக்களை வாங்கி குவிக்கின்றனர். ஆனால், இந்த அரசு அதிகாரிகளோ, தாங்கள் பணி ஓய்வு அடையும் வரையில்,
corruption, Krishnagiri dvac Raid, pwd Engineer


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில் அரசியல்வாதிகள், தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காலத்தில் தான் ஊழல் செய்து சொத்துக்களை வாங்கி குவிக்கின்றனர். ஆனால், இந்த அரசு அதிகாரிகளோ, தாங்கள் பணி ஓய்வு அடையும் வரையில், சொத்துக்களை வாங்கி குவிக்கின்றனர்; இதில் ஆண், பெண் பேதம் இல்லை!

வேலுார், பொதுப் பணித் துறை பெண் செயற்பொறியாளர் ஷோபனா வீட்டில் இருந்து, 2.28 கோடி ரூபாய் ரொக்கமாகவும், தங்கம், வெள்ளி நகைகள், 'பினாமி' பெயரில் சொத்து என ஏகப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.பொதுப் பணித் துறையில், ஊழல் இரண்டறக் கலந்து விட்டது. காவல் நிலையத்தில் எந்தெந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம் வாங்கப்படுகிறது என்பதை சமீபத்தில் அறிந்தோம்.

வணிக வரி, தொழிலாளர் நலம், உணவுப் பாதுகாப்பு, போக்குவரத்து போன்ற துறைகளில் லஞ்சம் புகுந்து விளையாடுகிறது. ஆட்சி மாறினாலும், இந்த ஊழல் அரசு அதிகாரிகள் மட்டும் 60 வயது வரை மாறுவதே இல்லை. ஊழல் அதிகாரிகள் பணி நிறைவு பெறும் கடைசி நாளில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு வந்ததை, தற்போது தமிழக அரசு நிறுத்தி விட்டதால், ஷோபனா போன்றோர் கடைசி வரையில், 'கல்லா' கட்டலாம்.


latest tamil news


ஜனாதிபதியாக இருந்து பணி நிறைவு பெற்ற போது, புத்தகங்கள் மற்றும் தன் உடைகளுடன் மட்டும் வெளியேறிய அப்துல் கலாம் பிறந்த தமிழகத்தில் தான், ஷோபனா போன்ற, 'ஊழல் பெருச்சாளி'களும் உள்ளனர். பள்ளி மாணவி ஒருவர், 'ஊழல் எப்போது ஒழியும்?' என, அப்துல் கலாமிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், 'உங்கள் பெற்றோர் எடுத்து வரும் ஊழல் பணத்தை தொட மாட்டோம்; அதன் மூலம் கிடைக்கும் ஆடம்பர பொருள்களை பயன்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எப்போது உறுதி எடுக்கின்றீரோ, அன்று தான் ஊழல் ஒழியும்' என பதில் அளித்தார்.

ஒழுக்கமான குழந்தைகளை உருவாக்க, நம் கல்வி முறை தவறி விட்டது. அதனால் தான், அரசு அதிகாரிகளிடம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஷோபனா போன்ற, 'கருப்பு ஆடுகள்' தண்டிக்கப்படுவதுடன், அவருக்கு உறுதுணையாக இருந்த குடும்ப உறவுகளும், சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
14-நவ-202119:14:43 IST Report Abuse
Rasheel கட்டிங் கொடுக்காமல் மாட்டி கொண்டார் போல?
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
13-நவ-202120:16:07 IST Report Abuse
K.n. Dhasarathan ஒருத்தருக்கு கொடுக்கும் தண்டனையில் அனைத்து ஊழல் பெருச்சாளிகளுக்கும் பயம் வர வேண்டும், நீதித்துறைதான் செய்ய வேண்டும், பாகிஸ்தானிலும் வங்காளதேசத்தில் கூட முன்னாள் அதிபர் , பிரதமர் என்று தவறு செய்யும் நபர் தண்டிக்கப்படுகிறார், ஆனால் இங்கேயோ குப்பன் சுப்பன் முதல் தலைமை செயலர் வரை ஆபீஸ் புகுந்து ரைடு நடந்தாலும் தப்பிக்கிறார்கள், நீதித்துறை சட்டம், உண்மை, சாட்சி காலை மட்டும் பார்க்கக்கூடாது, நியாயத்தையும் பார்க்க வேண்டும். அரசு அதிகாரி என்றால் அதிக பட்ச தண்டனை தரவேண்டும். மிக்கேல் குன்ஹா என்று ஒருவர் மட்டும் போதாது, ஒவ்வொருவரும் குன்கா ஆகவேண்டும், நீதித்துறை ஒன்றே தான் செய்ய முடியும், செய்யுமா ?
Rate this:
Cancel
Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா
11-நவ-202103:07:18 IST Report Abuse
Natesan Narayanan போலீஸ் முதல் ரிஜிஸ்டர் ஆபீஸ் வரை ஏன் நண்பர் லஞ்சம் வாங்கும் காட்சியை வீடியோ எடுத்துள்ளார் கழக ஆட்சியில் இந்த வீடியோ யாரிடம் அனுப்பி நீதி கேட்பது சொல்லுங்கள் ?
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
12-நவ-202113:12:15 IST Report Abuse
NicoleThomsonஐயோ அந்த தவறை மாத்திரம் செய்யாதீர்கள் ,...
Rate this:
Mr.Magnet - Toronto,கனடா
12-நவ-202114:20:24 IST Report Abuse
Mr.Magnetபயனற்றது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X