பொது செய்தி

தமிழ்நாடு

அடையாறு துவங்கும் இடத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு

Added : நவ 10, 2021
Share
Advertisement
படப்பை : அடையாறு ஆறு துவங்கும் இடத்தில், வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை, அமைச்சர்கள், அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே ஆதனுாரில் துவங்கும் அடையாறு ஆறு, சென்னை பட்டினப்பாக்கத்தில் கடலில் கலக்கிறது.ஆண்டுதோறும் வடக்கிழக்கு பருவமழை காரணமாக, அடையாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், வரதராஜபுரம், முடிச்சூர், உள்ளிட்ட பல்வேறு
 அடையாறு துவங்கும் இடத்தில்  அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு

படப்பை : அடையாறு ஆறு துவங்கும் இடத்தில், வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை, அமைச்சர்கள், அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே ஆதனுாரில் துவங்கும் அடையாறு ஆறு, சென்னை பட்டினப்பாக்கத்தில் கடலில் கலக்கிறது.ஆண்டுதோறும் வடக்கிழக்கு பருவமழை காரணமாக, அடையாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், வரதராஜபுரம், முடிச்சூர், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வெள்ள நீர் சூழ்கிறது. வெள்ள நீர் விரைவாக வெளியேற, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், ஊரக வளரச்சித் துறை முதன்மைச் செயலர் அமுதா, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டி: கடந்த கால மழை நிகழ்வுகளை முன் அனுபவமாக வைத்து, இந்த ஆண்டு பெருமழையில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.எம்.எல்.ஏ., - சென்னை மேயர், அமைச்சர், துணை முதல்வராக இருந்து அனுபவம் பெற்ற காரணத்தால், முதல்வர் ஸ்டாலின் சென்னை நகருக்கு ஏற்படும் பெரும் ஆபத்தை உணர்ந்தவர்.இதனால், பேராபத்தில் இருந்து சென்னை நகரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.கடந்த 2015 பெருமழையின் போது பணியில் இருந்த அனுபவமிக்க அதிகாரிகளை பணியில் அமர்த்தி, முன்னெச்சரிக்கை பணிகளை செய்து வருகிறோம். பெரும் அளவில் தண்ணீர் வந்தால் கூட, எந்த சேதாரமும் இல்லாமல் சமாளிக்க கூடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரக வளர்ச்சி துறை சார்பில், 7 கோடி ரூபாய் மதிப்பிலும், நீர்வளத் துறை சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பில், அடையாறு மற்றும் சிறு ஆறுகளை சீரமைக்கும் பணிகள் சிறப்பாக நடந்தன. வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் கடந்த கால வெள்ள பாதிப்புக்கள் தற்போது ஏற்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X