தமிழ்நாடு

மழை வெள்ள பாதிப்புகள் புகாரளிக்க எண் வெளியீடு

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையில், தொடர் கனமழை காரணமாக தேங்கியுள்ள மழை நீரை அகற்றுதல் மற்றும் மரக்கிளைகளை அகற்றுதல் தொடர்பாக புகாரளிக்க, மாநகராட்சி தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது.சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:சென்னையில், 7ம் தேதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, மாநகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்குகிறது. மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை

சென்னை : சென்னையில், தொடர் கனமழை காரணமாக தேங்கியுள்ள மழை நீரை அகற்றுதல் மற்றும் மரக்கிளைகளை அகற்றுதல் தொடர்பாக புகாரளிக்க, மாநகராட்சி தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:சென்னையில், 7ம் தேதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, மாநகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்குகிறது. மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ரிப்பன் மாளிகை கட்டட வளாகத்தில், பருவமழை குறித்து கண்காணிக்கவும், பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெறவும், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டுப்பாட்டு அறையில் புகாரளிக்க, 044 - 2561 9204; 2561 9206; 2561 9207; 2561 9208; 2530 3870 ஆகிய தொலைபேசி எண்களில் அழைக்கலாம்.மேலும், ஒரே நேரத்தில் 30 இணைப்புகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள 1913 என்ற எண்ணையும் அழைக்கலாம்.

இது தவிர, 94454 77205; 94450 25819; 94450 25821 ஆகிய 'வாட்ஸ்-ஆப்' எண்களில் வீடியோ, புகைப்படம் போன்றவற்றை அனுப்பி தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X