இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': 3வது முறையாக சுவாமி சிலைகள் உடைப்பு

Added : நவ 10, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்:கொலை மிரட்டல்: டாக்டர் கைதுகோல்கட்டா: மேற்கு வங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலர் அலபன் பந்தோபாத்யாயா, முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகராக உள்ளார். கோல்கட்டா பல்கலை துணை வேந்தரான இவரது மனைவி சோனாலிக்கு, சமீபத்தில் வந்த கடிதத்தில் 'உங்கள் கணவர் கொல்லப்படுவார்' என, மிரட்டல் விடுக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார்
Crime, Murder, Arrest, Theft, Accident


இந்திய நிகழ்வுகள்:


கொலை மிரட்டல்: டாக்டர் கைது

கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலர் அலபன் பந்தோபாத்யாயா, முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகராக உள்ளார். கோல்கட்டா பல்கலை துணை வேந்தரான இவரது மனைவி சோனாலிக்கு, சமீபத்தில் வந்த கடிதத்தில் 'உங்கள் கணவர் கொல்லப்படுவார்' என, மிரட்டல் விடுக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் மருத்துவக் கல்லுாரியில் பணியாற்றும் டாக்டர் உட்பட மூவரை கைது செய்தனர். இது போல பலருக்கும் கடிதம் அனுப்பியுள்ள டாக்டர், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல தெரிவதாக போலீசார் கூறி உள்ளனர்.


லஞ்ச அதிகாரி சிக்கினார்

இந்துார்: மத்திய பிரதேசத்தின் இந்துாரில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நடக்கும் 1.74 கோடி ரூபாய் பணிகளுக்கான ஒப்பந்ததாரரிடம், செயற்பொறியாளர் ராகேஷ் குமார் சிங்கால், 55, தனக்கு 17 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதில், 5 லட்சம் ரூபாயை ஏற்கனவே வாங்கி யுள்ளார். அடுத்ததாக, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும், 11.5 லட்சத்திற்கான, 'செக்' ஆகியவற்றை வாங்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராகேஷ் குமாரை கைது செய்தனர்.


6 மாணவர்கள் கைது

கண்ணுார்: கேரளாவின் கண்ணுாரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் இரண்டாம் ஆண்டு மாணவர் அன்ஷாத், சமீபத்தில் மாணவியரிடம் பேசியுள்ளார். ஆத்திரம் அடைந்த மூத்த மாணவர்கள், அவரை கல்லுாரியின் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று தாக்கியதுடன் 'ராகிங்' செய்துள்ளனர். இதில் மயங்கிய அன்ஷாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராகிங்கில் ஈடுபட்ட ஆறு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.


மருத்துவமனையில் தீ: பச்சிளம் குழந்தைகள் 4 பேர் பலி

போபால்: மத்திய பிரதேசத்தின் போபால் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள கமலா நேரு குழந்தைகள் மருத்துவமனை, பல்வேறு சிறப்பு சிகிச்சை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்றாம் தளத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பற்றியது. அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள், குழந்தைகளை மீட்கும் நடவடிக்கைகளைத் துவங்கினர்.

மின் தடை மற்றும் புகை மண்டலம் காரணமாக குழந்தைகள் இருக்குமிடம் தெரியாமல் அவர்கள் தவித்தனர். இந்த குழப்பத்தின் காரணமாக சிலர் தங்கள் குழந்தைக்கு மாற்றாக வேறு நபரின் குழந்தைகளை துாக்கிச் சென்றனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். அதற்கு முன் தீயில் கருகி நான்கு குழந்தைகள் பலியாயினர்.


தமிழக நிகழ்வுகள்:


காமுகனுக்கு 5 ஆண்டு சிறை

ஈரோடு: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுபாஷ், 24; தனியார் வங்கி ஊழியர். அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியிடம், 2019 மார்ச் மாதம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு, ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி மாலதி நேற்று அளித்த தீர்ப்பில், சுபாஷுக்கு ஐந்தாண்டு சிறை, 1,000ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


latest tamil newsசிறுமி பலாத்காரம்: போலீஸ் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி, அண்ணா நகரில் இயங்கிய மசாஜ் சென்டரில் போலீசார் அக்., 16ல் சோதனை நடத்தி, விபசாரத்தில் ஈடுபட்டதாக, 17 வயது சிறுமி உட்பட நான்கு பெண்களை மீட்டனர். விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தது.மசாஜ் சென்டர் நடத்திய பெண் உட்பட நால்வரை கைது செய்தனர். அங்கு வந்து சென்ற 40 பேர் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்தனர். மசாஜ் சென்டர் நடத்திய பெண்ணை நேற்று முன்தினம் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், சிறுமியை பலாத்காரம் செய்தவர்கள் விபரங்களை வாக்குமூலமாக பெற்றுள்ளனர்.


3வது முறையாக சுவாமி சிலைகள் உடைப்பு

பெரம்பலுார்:-சிறுவாச்சூரில், தொடர்ந்து மூன்றாவது முறையாக, சுவாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சிறுவாச்சூர் அருகே, பெரியசாமி மலையில், இக்கோவிலின் துணைக் கோவிலான பெரியசாமி, செங்கமலையார் கோவில்கள் உள்ளன.அக்டோபர் 6ம் தேதி, பெரியசாமி கோவிலில் 10 அடி உயரமுள்ள பெரியசாமி சிலை உட்பட ஒன்பது சிலைகளும், செங்கமலையார் கோவிலில் கன்னிமார்கள் சிலை, சுட்ட மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் உட்பட மொத்தம் 14 சிலைகள், மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.

பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து, சென்னையைச் சேர்ந்த நாதன் என்பவரை கைது செய்தனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் ஜாமினில் சென்ற நிலையில், அக்டோபர் 27ல், மீண்டும் பெரியசாமி கோவிலில், ஐந்து சிலைகள் உட்பட 18 சிலைகள், மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன. இதையடுத்து, கோவில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், இரு காவலர்களும் நியமிக்கப்பட்டனர். போலீசாரும் அவ்வப்போது, ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மூன்றாவது முறையாக, பெரியசாமி கோவிலில் 15 அடி உயர குதிரை சிலை, ஆத்தடி சித்தர் கோவிலில் 3 அடி உயரமுள்ள நாககன்னி சிலை உட்பட இரண்டு சிலைகள்.பெருமாள் கோவிலில் 5 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, செங்கமலையார் கோவிலில் 15 அடி உயர பொன்னுசாமி சிலை உட்பட மொத்தம் ஒன்பது சிலைகள், மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு மழை பெய்து கொண்டிருந்ததால், காவலர்கள் இருவரும் பணிக்கு செல்லவில்லை எனவும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவில்லை எனவும் கூறப்படு கிறது.

'மழையால், 'சிக்னல்' கிடைக்காமல் கண்காணிப்பு கேமரா செயல்பட வில்லை; அது சரியானதும், பதிவுகளை ஆய்வு செய்தால் குற்றவாளி யார் என்பது தெரிய வரும்' எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 'ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், தொடர்ந்து மூன்று முறை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளும், போலீசாரும் மெத்தனமாக உள்ளனர்' என பக்தர்கள் குற்றம் சாட்டினர்.


சுற்றுலா வாகன விபத்து; 15 பேர் காயம்

கூடலுார்: கூடலுார் சில்வர் கிளவுட் அருகே, தேசிய நெடுஞ்சாலையில், சுற்றுலா வாகனம் கவிழ்ந்த விபத்தில், 15 பேர் காயம் அடைந்தனர்.

கர்நாடகா, பெங்களுரூவை சேர்ந்த சுற்றுலா பயணிகள், 15 பேர், ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு, நேற்று மாலை வாகனம் மூலம், கூடலுார் நோக்கி வந்துள்ளனர். மாலை, 6:00 மணிக்கு, கூடலுார் சில்வர் கிளவுட், சோதனைச்சாவடி அருகே உள்ள பாலத்தை கடந்த வாகனம், கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரதடுப்பில் மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், காயமடைந்த ஓட்டுனர் ஹர்ஷ்குமார், 33, உட்பட 15 பேர், '108' ஆம்புலன்ஸ் மூலம், கூடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.போலீசார் விசாரித்து வருகின்றனர்.


உலக நிகழ்வுகள்:


பள்ளியில் தீ விபத்து; 20 குழந்தைகள் பலி

நியாமி: நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாயினர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரின் இரண்டாவது பெரிய நகரம் மராடி. இங்குள்ள ஒரு நர்சரி மற்றும் துவக்கப் பள்ளி வகுப்பறையின் வைக்கோல் கூரையில் திடீரென தீப்பற்றியது. அடுத்தடுத்த வகுப்பறைகளுக்கும் நெருப்பு வேகமாக பரவியது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அதற்குள் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் தீயில் கருகி பலியாயினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த உயிர் பலிகள், தற்காலிக வகுப்பறைகளின் ஆபத்தை உணர்த்துவதாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் அறிய விசாரணை துவங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
11-நவ-202121:35:39 IST Report Abuse
sankaseshan இதுவே ஒரு நொண்ணவோ சொரியார் சிலையோ சேதப்பட்டிருந்தா ஆட்சியாளர்களும் டிராவிடங்களும் பொங்கியிருப்பார்கள்
Rate this:
Cancel
11-நவ-202108:55:49 IST Report Abuse
ராஜா Scotland Yard காவல்துறைக்கு இணையான காவல்துறை என்று பெயரெடுதவர்களால் கூட கண்டுபிடிக்க முடியவில்லையா!? தமிழ்நாடு இன்னொரு பங்களாதேஷ் மற்றும் பகிஸ்தானாகிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
10-நவ-202115:51:21 IST Report Abuse
DVRR வைக்கோல் கூரையில் திடீரென தீப்பற்றியது.மேற்கு ஆப்பிரிக்க நைஜர் அவ்வளவு பிச்சைக்கார கேவலமான நாடா என்ன?? ஒண்ணுமே மூட இல்லேன்னாலும் ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை இருக்கும் எந்த பள்ளியானாலும் (முக்கியமாக பெண்கள் படிக்கும் பள்ளி என்றால்)???இதற்கு காரணம் என்னவோ நிச்சயமாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் என்று தீர்மானமாகக் கூறமுடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X