பொது செய்தி

தமிழ்நாடு

உபரி நீர் திறப்பால் மூழ்கியது மாதவரம் சாலை; போக்குவரத்துக்கு நெடுஞ்சாலைத்துறை தடை

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை : புழல் மற்றும் ரெட்டேரி உபரி நீர் திறப்பால், மாதவரம் நெடுஞ்சாலை மூழ்கியது. இதனால் வாகன போக்குவரத்துக்கு நெடுஞ்சாலைத்துறை தடை விதித்துள்ளது.சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், வடகரை சந்திப்பில் துவங்கும் மாதவரம் நெடுஞ்சாலை, மூலக்கடை ஜி.என்.டி., சாலையில் இணைகிறது. இது 9.50 கி.மீ., நீளம் கொண்டது. இச்சாலை, மஞ்சம்பாக்கத்தில் நுாறடிச்சாலையை கடந்து
 உபரி நீர் திறப்பால் மூழ்கியது மாதவரம் சாலை;    போக்குவரத்துக்கு நெடுஞ்சாலைத்துறை தடை


சென்னை : புழல் மற்றும் ரெட்டேரி உபரி நீர் திறப்பால், மாதவரம் நெடுஞ்சாலை மூழ்கியது. இதனால் வாகன போக்குவரத்துக்கு நெடுஞ்சாலைத்துறை தடை விதித்துள்ளது.

சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், வடகரை சந்திப்பில் துவங்கும் மாதவரம் நெடுஞ்சாலை, மூலக்கடை ஜி.என்.டி., சாலையில் இணைகிறது. இது 9.50 கி.மீ., நீளம் கொண்டது. இச்சாலை, மஞ்சம்பாக்கத்தில் நுாறடிச்சாலையை கடந்து செல்கிறது.கட்டமைப்புகள் இல்லைமுக்கிய சாலைகளை இணைக்கும் வகையில் இச்சாலை இருப்பதால், மணலி, மாத்துார், மாதவரம், திருவொற்றியூர் மட்டுமின்றி, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், சரக்கு வாகனங்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றன.

இச்சாலையில் வடபெரும்பாக்கத்தில் புழல் ஏரி உபரி நீர் கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், ரெட்டேரியில் திறக்கப்படும் நீர் வெளியேற முறையான கட்டமைப்புகள் இல்லை. தற்போது, புழல் மற்றும் ரெட்டேரியில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரி உபரி நீர் கால்வாயில் இருந்த சீமை கருவேலம் உள்ளிட்ட மரங்கள் அகற்றப்படாமல், புனரமைப்பு செய்யப்பட்டது. இதனால், கால்வாயில் வெளியேற வேண்டிய நீர், சாலையை சூழ்ந்துள்ளது. இதேபோன்று, ரெட்டேரி நீரும் சாலையை மூழ்கடித்துள்ளது.இருசக்கர வாகனங்கள் மூழ்கும் அளவிற்கு நீரோட்டம் உள்ளது. இரவு நேரங்களில், விபரம் தெரியாமல் பயணிக்கும் வாகனங்கள், நீரில் மூழ்கும் வாய்ப்புள்ளது.

எனவே, நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, சாலையில், சவுக்கு கட்டை தடுப்புகள் அமைத்து, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கடும் பாதிப்புவெள்ளப்பெருக்கு காரணமாக சாலை மூடப்பட்டுள்ளது குறித்த பேனரும் நேற்று வைக்கப்பட்டது.

இதனால், வடபெரும்பாக்கம், செட்டிமேடு, தீயம்பாக்கம், வெஜிடேரியன் வில்லேஜ் உள்ளிட்ட சென்னை விரிவாக்க பகுதி மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராண்ட்லைன், புள்ளிலைன், வடகரை, அழிஞ்சிவாக்கம், விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அலுவல் காரணமாக சென்னைக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X