தமிழ்நாடு

முதல்வரிடம் முறையிட முயன்ற மக்களை வேளச்சேரியில் தடுத்து நிறுத்திய கட்சியினர்

Added : நவ 10, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : வெள்ளத்தில் தத்தளிக்கும் வேளச்சேரி மக்கள், தங்கள் பகுதி பிரச்னை குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் முறையிட முயன்றபோது, கட்சிக்காரர்கள், அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர். சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்தில், வேளச்சேரி, தரமணி, ஆதம்பாக்கம் பகுதிகள் அதிக வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும்.பொதுவாக, கனமழை பெய்து சில மணி நேரம், குப்பை, கழிவுநீருடன் மழைநீர்
 முதல்வரிடம் முறையிட முயன்ற மக்களை வேளச்சேரியில் தடுத்து நிறுத்திய கட்சியினர்

சென்னை : வெள்ளத்தில் தத்தளிக்கும் வேளச்சேரி மக்கள், தங்கள் பகுதி பிரச்னை குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் முறையிட முயன்றபோது, கட்சிக்காரர்கள், அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்தில், வேளச்சேரி, தரமணி, ஆதம்பாக்கம் பகுதிகள் அதிக வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும்.பொதுவாக, கனமழை பெய்து சில மணி நேரம், குப்பை, கழிவுநீருடன் மழைநீர் செல்லும். அதற்கு பின், தெளிந்த மழைநீராக செல்லும்.ஆனால், தரமணி, வேளச்சேரி பகுதியில் கறுப்பு நிறத்தில் மழைநீர் சென்றதுடன், ராம் நகரில் சில தெருக்களிலும் நீர் தேங்கியது.மாநகராட்சி அதிகாரிகள், மழைநீர் கறுப்பு நிறத்தில் வருவதற்கான காரணத்தை தேடினர்.வேளச்சேரி, ராம் நகரில் கழிவுநீர் வெளியேற்று நிலையம் உள்ளது. கொள்ளளவு அதிகரிப்பு தெரிந்தும், 10 ஆண்டுகளாக நிலையத்தை அதிகாரிகள் மேம்படுத்தவில்லை.

இதனால், பல ஆண்டுகளாக கழிவுநீர், மழைநீர் வடிகாலில் விடப்படுகிறது. வடிகால் மேல் மூடியால், கழிவுநீர் செல்வது தெரியவில்லை. வேளச்சேரி உபரிநீர் கால்வாயை, மூடுகால்வாயாக மாற்ற பழைய கால்வாய் தகர்க்கப்பட்டது.அப்போது, வடிகாலில் இருந்து கால்வாய் நோக்கி கழிவுநீர் ஆறாக ஓடியது தெரிந்தது. அதேபோல், வேளச்சேரி விரைவு சாலை, தரமணி பிரதான சாலை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகம் ஆகிய பகுதியில் உள்ள வெளியேற்று நிலையத்தில் இருந்தும், கழிவு நீர் வடிகாலில் விடப்படுகிறது.

இந்த நிலையங்கள், ஏற்கனவே பழுதடைந்துள்ளதால், மழைக்காலங்களில் அதிகளவு கழிவு நீர், வடிகால் வழியாக வெளியேற்றப்படுகிறது.ஏற்கனவே மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள், கழிவுநீரிலும் மிதக்க வேண்டி உள்ளதால், தொற்று நோய் பரவும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.இது குறித்து, ஞாயிற்றுக்கிழமை வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற முதல்வர் ஸ்டாலினிடம், பகுதி மக்கள் முறையிட முயன்றனர். ஆனால், முதல்வரை பார்க்க முடியவில்லை என, அவர்கள் ஆதங்கப்பட்டனர்.இது குறித்து, வேளச்சேரி மக்கள் கூறியதாவது: வேளச்சேரி அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. 30 - 40 ஆண்டுக்கு முன் பதித்த குழாய் வழியாக தான், கழிவுநீர் பெருங்குடி செல்கிறது.

கட்டடங்களின் எண்ணிக்கை, மக்கள் தொகைக்கு ஏற்ப, குழாய்கள் மாற்றி அமைக்கப்படவில்லை. பத்து ஆண்டுகளாக கோரிக்கை வைக்கிறோம். நடவடிக்கை தான் இல்லை. வெள்ள பாதிப்புடன், கழிவுநீர் தொற்றையும் சேர்த்து அனுபவிக்க வேண்டிய அவல நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் வேளச்சேரி வெள்ள பாதிப்பை பார்வையிட வந்தபோது, கழிவுநீர் பிரச்னை குறித்து அவரிடம் பேச முயன்றோம். சில கட்சிக்காரர்கள், அதிகாரிகள் எங்களை தடுத்தனர். முதல்வர் தலையிட்டு வெள்ள பாதிப்புக்கும், கழிவுநீர் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
10-நவ-202118:44:19 IST Report Abuse
S. Narayanan ஒரு தாய் மக்கள் என்று ஸ்டாலின் கூறுகிறார் ஆனால் நடப்பது என்ன இந்த மழை நீரில் ஒரு பெண் எனக்கு சாப்பாடு வேண்டாம் என் வீட்டை பாருங்கள் என்று முறையிடுவதையும் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் சாம்பார் சாதத்தை கொடுத்து விட்டு போய் விட்டார். இது தான் மக்களை மதிக்கும் பண்பா.
Rate this:
Cancel
10-நவ-202117:51:24 IST Report Abuse
ராஜா வெள்ளத்தை பத்தி பேச போரேன்னு சொல்லிட்டு வீடுக்கெல்லாம் கூப்பிட்டால்!? எப்பிடி விடிய வைக்கிறது?
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
10-நவ-202111:32:59 IST Report Abuse
Bharathi தேர்தலுக்கு முன்னாலே யாரோ சொன்னாரு. நான் முதல்வர் ஆனால் என் அறை கதவு எப்போதும் திறந்தே இருக்கும். யார் வேணும்னாலும் உள்ள வரலாம்னு. அதையும் நம்பி ஒட்டு போட்ட டுமீளனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X