சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கம்பி அறுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை : ரயில் பாதையில் மின் கம்பி அறுந்ததால், கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் இடையே, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் புறநகர் மின்சார ரயில் பாதையில், எண்ணுார் அருகே மதியம் 2:45 மணிக்கு, மின் கம்பி அறுந்ததால், அந்த வழியாக உள்ள போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.ஆந்திரா மாநிலம், சூலுார்பேட்டையில் இருந்து சென்னை

சென்னை : ரயில் பாதையில் மின் கம்பி அறுந்ததால், கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் இடையே, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் புறநகர் மின்சார ரயில் பாதையில், எண்ணுார் அருகே மதியம் 2:45 மணிக்கு, மின் கம்பி அறுந்ததால், அந்த வழியாக உள்ள போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.ஆந்திரா மாநிலம், சூலுார்பேட்டையில் இருந்து சென்னை வந்த புறநகர் மின்சார ரயில், எண்ணுார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

பின், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட இரண்டு புறநகர் மின்சார ரயில்கள் வழியில் உள்ள நிலையங்களில் நிறுத்தப்பட்டன.ரயில்வே மின் பிரிவு மீட்பு குழுவினர், மின் வழித்தடத்தை சரி செய்தனர். அதன் பின் 3:45 மணிக்கு, மீண்டும் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது.ஒரு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணியர் அவதிக்குள்ளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X