தமிழ்நாடு

நிவாரண முகாம்களில் 1,343 பேர்;

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை மாநகராட்சி நிவாரண முகாம்களில் 1,343 பேர் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்படுவதுடன், மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னையில், மழைநீர் தேங்கும் இடங்களில், 'டெங்கு' காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில், பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தாழ்வான

சென்னை : சென்னை மாநகராட்சி நிவாரண முகாம்களில் 1,343 பேர் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்படுவதுடன், மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னையில், மழைநீர் தேங்கும் இடங்களில், 'டெங்கு' காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில், பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு, தங்க வைப்பதற்காக, 166 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.அக்., 25ம் தேதி முதல் மாநகரின் பல்வேறு பகுதிகளில், அவ்வப்போது மிதமான மழையும், 7ம் தேதி முதல் கன மழையும் பெய்தது. இரண்டு நாட்களாக கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த, 1,343 பேர் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டு, 58 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இம்முகாம்களில் தங்க உள்ளவர்களுக்கு, மூன்று வேளை உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது. மழைக்காலங்களில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும், முகாம்களில் மாநகராட்சி டாக்டர்கள் மருத்துவ முகாம்கள் நடத்தி, உடல்நிலையை பரிசோதித்து வருகின்றனர்.அதன்படி, நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும், 47 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 1,673 பேர் பயனடைந்துள்ளனர்.

மாநகராட்சி முழுதும், 205 முகாம்கள் நடத்தப்பட்டு, 8,500 பேர் பயனடைந்துள்ளனர். இதில், 673 தோல் சம்பந்தமான சிகிச்சைகளும், 295 நபர்களுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.இம்மாதம், 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, 1,060 மருத்துவ முகாம்களில், 30 ஆயிரத்து 234 பேர் பயனடைந்துள்ளனர்.

அதேபோல், பல்வேறு சாதனங்களை கொண்டு, கொசு ஒழிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை கொதிக்க வைத்து, குளிர்ந்தப்பின் குடிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X