பாலமேடு : மதுரை சாத்தையாறு அணையை ஆய்வு செய்த கலெக்டர் அனீஷ்சேகர், மாவட்டத்தில் தொடர் மழையால் 70 சதவீத கண்மாய்கள் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சாத்தையாறு அணை நீர்மட்டம் 29 அடி. தற்போது 28 அடிக்கு அருகிலுள்ளது. நிறையும் போது இப்பகுதி விவசாயிகளுக்கு உதவியாகவும் அணைக்கு கீழுள்ள பத்து கண்மாய்களில் தண்ணீர் நிரப்ப வசதியாக இருக்கும்.மதுரை மாவட்டத்தில் மழையளவு இயல்பான சராசரியை ஒத்துள்ளது. கண்மாய்கள் 70 சதவீதம் நிரம்பியுள்ளன. இதிலிருந்து தண்ணீரை வெளியேற்றவும் வரத்து கால்வாய்களை சீரமைத்து கண்மாய் கரைகளை பலப்படுத்த பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை இணைந்து வேலை செய்கிறோம்.
சாத்தையாறு அணை பகுதியில் ஆக்கிரமிப்பு இல்லை. அப்படி இருப்பதாக ஆதாரம் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கிடையே மழை பாதிப்பில் இருந்து மக்களை காக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.எஸ்.பி., பாஸ்கரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமாரன், உதவி பொறியாளர் ராஜ்குமார், தாசில்தார் நவநீதகிருஷ்ணன், பி.டி.ஓ., கதிரவன், பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரமேசன் உடன் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE