தமிழ்நாடு

நிரம்பி வழியும் அணைக்கட்டு; கண்காணிப்பு பணி தீவிரம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி : ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள ஏ.என்.குப்பம் அணைக்கட்டு நிரம்பி, வினாடிக்கு, 1,850 கன அடி தண்ணீர் பாய்கிறது. அணைக்கட்டு மற்றும் ஆரணி ஆற்று கரையோர பகுதிகளை, அரசு துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்..கவரைப்பேட்டை அருகே, ஏ.என்.குப்பம் கிராமத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. தொடர் கன மழையால், அணைக்கட்டின் கீழ் உள்ள ஏரிகளுக்கான நீர் வரத்து
 நிரம்பி வழியும் அணைக்கட்டு;  கண்காணிப்பு பணி தீவிரம்

கும்மிடிப்பூண்டி : ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள ஏ.என்.குப்பம் அணைக்கட்டு நிரம்பி, வினாடிக்கு, 1,850 கன அடி தண்ணீர் பாய்கிறது. அணைக்கட்டு மற்றும் ஆரணி ஆற்று கரையோர பகுதிகளை, அரசு துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்..

கவரைப்பேட்டை அருகே, ஏ.என்.குப்பம் கிராமத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. தொடர் கன மழையால், அணைக்கட்டின் கீழ் உள்ள ஏரிகளுக்கான நீர் வரத்து கால்வாய் திறக்கப்பட்டது.ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கு அதிகரித்ததால், அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. தற்போது, அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு, 1,850 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.அணைக்கட்டு பகுதி யில், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டனர். மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.அணைக்கட்டு மற்றும் ஆரணி ஆற்று கரையோர பகுதிகளை, பொதுப்பணித் துறையினர், வருவாய் துறையினர், ஒன்றிய நிர்வாகத்தினர் மற்றும் போலீசார், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X