பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: அமுதா

Added : நவ 10, 2021
Share
Advertisement
ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலர் அமுதா அளித்த பேட்டி:காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களும், ஏரிகள் நிரம்பிய மாவட்டங்கள். முன்பு ஏரிகள் அனைத்தும், விவசாயத்திற்காக பயன்பட்டது. பின், வணிக ரீதியான முன்னேற்றங்கள் வந்தவுடன், ஏரிகள் குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டன.ஏரிகள் முறையாக பராமரிக்கப்படாததால், 2015ல் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின், 1,000 கோடி ரூபாய்

ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலர் அமுதா அளித்த பேட்டி:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களும், ஏரிகள் நிரம்பிய மாவட்டங்கள். முன்பு ஏரிகள் அனைத்தும், விவசாயத்திற்காக பயன்பட்டது. பின், வணிக ரீதியான முன்னேற்றங்கள் வந்தவுடன், ஏரிகள் குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டன.ஏரிகள் முறையாக பராமரிக்கப்படாததால், 2015ல் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின், 1,000 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டது.

அதற்கான பணிகள் பல இடங்களில் முடிந்துள்ளன; சில இடங்களில் நடந்து வருகின்றன. ஆதனுார் அடையாறு கால்வாய் ஆழப்படுத்தப்பட்டு, அகலப்படுத்தப்பட்டுள்ளது.ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்புடைய வழக்குகளை முடித்து, அந்த ஆக்கிரமிப்புகளும் விரைவில் அகற்றப்படும்.இவ்வாறுல அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X