சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேங்கிய நீரில் மின் கசிவு தொழிலாளி பரிதாப பலி

Added : நவ 10, 2021
Share
Advertisement
மாதவரம் : தேங்கிய மழைநீரில் நடந்து சென்ற தொழிலாளி, மின்சாரம் பாய்ந்து பலியானார்.வியாசர்பாடி, முல்லை நகரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன், 45; தொழிலாளி.இவர், நேற்று முன்தினம் தன் நண்பர் ஸ்டாலின் என்பவருடன், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகில், லாரி நிறுத்த வளாகத்தில் உள்ள தனியார் குடோனில், பாரம் துாக்கும் வேலை செய்தார்.இரவு வேலை முடிந்து டீ குடிக்க, குடோனில் இருந்து

மாதவரம் : தேங்கிய மழைநீரில் நடந்து சென்ற தொழிலாளி, மின்சாரம் பாய்ந்து பலியானார்.

வியாசர்பாடி, முல்லை நகரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன், 45; தொழிலாளி.இவர், நேற்று முன்தினம் தன் நண்பர் ஸ்டாலின் என்பவருடன், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகில், லாரி நிறுத்த வளாகத்தில் உள்ள தனியார் குடோனில், பாரம் துாக்கும் வேலை செய்தார்.இரவு வேலை முடிந்து டீ குடிக்க, குடோனில் இருந்து வெளியே சென்றார்.

அங்கு தேங்கியிருந்த மழை நீரில் இறங்கி நடந்தார். அப்போது, மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவால், மழை நீரில் மின்சாரம் பாய்ந்து, இளஞ்செழியன் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலே பலியானார். மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X